Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமா ரிலீஸ்...! போட்டியாளர்கள் பற்றி கமல் சொன்னது என்ன? முழு வீடியோவும் உள்ளே..!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ப்ரோமோ ரிலீசாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்க உள்ளதாக கமல்ஹாசன் கூறுகிறார்.
![Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமா ரிலீஸ்...! போட்டியாளர்கள் பற்றி கமல் சொன்னது என்ன? முழு வீடியோவும் உள்ளே..! Bigg Boss Ultimate Tamil OTT disney plus hotstar Kamal Haasan promo BB Ultimate- Watch Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமா ரிலீஸ்...! போட்டியாளர்கள் பற்றி கமல் சொன்னது என்ன? முழு வீடியோவும் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/17/551fe87b1358b9382c733bbba033d940_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் 5வது சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் போட்டியின் வெற்றியாளராக ராஜூ வெற்றி பெற்றார். இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய தொடருக்கான அறிவிப்பும் வெளியானது.
இதுவரை விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது. இந்த புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற 4 சீசன்களின் போட்டியாளர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் தற்போது நடைபெற்று முடிந்த 5வது சீசன் போட்டியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட்டின் ப்ரோமா இன்று வெளியாகியுள்ளது.
தொலைச்ச இடத்துல தான தேட முடியும்..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 17, 2022
தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்..
This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! 😎 #BBUltimate pic.twitter.com/FIs7O3GUky
அந்த டீசரில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பது போலவும், அந்த வீட்டிற்குள் கமல்ஹாசன் உள்ளே வருவது போலவும் உள்ளது. பின்னர், கமல்ஹாசன் சுவரை தூக்கிக் கட்டுங்க. ஏனென்றால்,. மாட்டுக்கார காளையையும் பாத்துருக்கோம். சுவரையே தாண்டி குதிக்குறவங்களையும் நாம பாத்துருக்கோம் என்று பேசுகிறார். பின்னர், ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
24 மணி நேரமும் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டை கண்டுகளிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார். மேலும், தொலைச்ச இடத்துல தானே தேட முடியும். தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும். விரைவில் நம்ம டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ல் மட்டுமே என்று இந்த ப்ரோமோ முடிகிறது. 24 மணி நேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பழைய சீசன்களின் மக்களின் வரவேற்பை பெற்ற ஓவியா, ஆரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்று சமூகவலைதளங்களில் விவாதம் ஏற்படத்தொடங்கியுள்ளது. அதேபோல, விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்யும் வனிதா, தாமரை, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க : Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)