Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலை!
Alanganallur Jallikattu Live: அலங்காநல்லூர் எப்போதும் ஸ்பெஷல். காரணம் அதன் வாடிவாசல். மற்ற வாடிவாசல்கள் எல்லாம், காளைகள் வெளியேறியதும் நேராக பாய்ந்து செல்லும் வடிவில் இருக்கும். அதனால்...
இந்த ஆண்டின் மெகா ஜல்லிக்கட்டு... உலகமே உற்று நோக்கும் மதுரை மாவட்டத்தில் கடைசி ஜல்லிக்கட்டு... மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வழக்கமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என்கிற தொடர் வரிசையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14 ல் அவனியாபுரம், ஜனவரி 15ல் பாலமேடு, ஜனவரி 16 ல் அலங்காநல்லூர் என்கிற வரிசை தான் இதுவரை பின்பற்றப்பட்டிருக்கிறது.
கொரோனா தாக்கம்... ஒமிக்ரான் மிரட்டல் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு போடப்பட்டு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஜனவரி 16 ல் ஞாயிற்று கிழமை வந்ததும், பல பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு தீர்வு கண்ட தமிழ்நாடு அரசு, ஒரு நாள் இடைவெளி விட்டு ஜனவரி 17 ல்... அதாவது இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அலங்காநல்லூர் எப்போதும் ஸ்பெஷல். காரணம் அதன் வாடிவாசல். மற்ற வாடிவாசல்கள் எல்லாம், காளைகள் வெளியேறியதும் நேராக பாய்ந்து செல்லும் வடிவில் இருக்கும்.
ஆனால் அலங்காநல்லூர் வாடிவாசல் காலை வெளியேறியதும் நேராக வந்து இடது புறம் திரும்பிச் செல்லும் படி எல் வடிவில் இருக்கும். இதனால் காளைகள் நின்று விளையாட வாய்ப்புண்டு. இது போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். பார்வையாளர்களுக்கு விருந்து கிடைக்கும் என்பதால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போதும் கொண்டாடப்படும். அதனால் அதை காண கூட்டமும் அள்ளும். இந்தமுறை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், அனைவரும் வீட்டிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏற்பாடு செய்துள்ளது ஏபிபி நாடு. போட்டி தொடங்கியது முதல், பரிசு பெற்று வீடு திரும்பும் வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக... அதிலும் எச்.டி., தரத்தில் ஏபிபி நாடு யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பார்த்து மகிழலாம்.
கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்தாலும் ஜல்லிக்கட்டு நேரலை பார்க்கலாம்!
வழக்கம் போல, எந்த இடையூறும், கருத்து குறுக்கீடும் இல்லாமல், அப்படியே மண்மனம் மாறாத வர்ணனையோடு அலங்கை ஜல்லிக்கட்டை பார்த்து ரசியுங்கள். பரிசுகள் ஏராளம்... சுவாரஸ்யம் தாராளம் இருக்கும்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்