மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: மனைவியை பிரிந்த காரணத்தை சொன்ன தினேஷ்.. பதிலடி கொடுத்த ரச்சிதா.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனைவியும், நடிகையுமான ரச்சிதா மகாலெட்சுமியை பிரிந்த காரணத்தை நடிகர் தினேஷ் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனைவியும், நடிகையுமான ரச்சிதா மகாலெட்சுமியை பிரிந்த காரணத்தை நடிகர் தினேஷ் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி உள்ளே நுழைந்தார். இவர் பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலெட்சுமியின் கணவர் ஆவார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சீசனில் போட்டியாளராக ரச்சிதா பங்கேற்ற நிலையில், இந்த சீசனில் தினேஷ் கலந்து கொண்டுள்ளார்.

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், “உங்கள் வாழ்க்கையிலும் உலகம் அதிரும் படியான சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் உங்களை உருவாக்கி இருக்கலாம், அல்லது அடையாளம் காட்டி இருக்கலாம். பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அது போன்று உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதில் முதலில் பேசிய நடிகர் தினேஷ் கோபால்சாமி, “என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பூகம்பமான சம்பவம் எது என்னவென்று கேட்டால் என்னுடைய திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய இடைவெளி விழுந்தது தான். எல்லோர் வீட்டிலும் இருப்பது போல எனக்கும், என் மனைவிக்கும் சின்ன சண்டை ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் பெரியவர்களால் தீர்க்க முடியாத அளவுக்கு இருவரும் பிரியும் நிலைக்கு சென்று விட்டது.

அந்த பிரச்சினையை இப்போதும் எதிர்கொண்டு தான் வருகிறேன். நான் அதனை ஏற்றுக்கொண்டு பிரச்சனையில் இருந்து வெளியே வர பாசிட்டிவ் விஷயங்களை எடுத்துக் கொண்டாலும், என்னால் வெளியே வர முடியவில்லை. விட்டுக் கொடுக்கவும் முடியாமல் வாழ்க்கை அப்படியே சென்று சென்று கொண்டிருக்கிறது.

எங்கள் பிரிவு நடந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு என்னையே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு மட்டும்தான் அந்த பிரச்சனை இருந்திருக்கிறது என சொல்லவில்லை. அவருக்கும் (ரச்சிதா மகாலட்சுமி) இருந்திருக்கலாம். அவரும் அதையெல்லாம் நிறைய கடந்து வந்து  இருக்கிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கான அந்த விஷயமானது தடைப்பட்டு நிற்கிறது. அதைத் தேடிக் கொண்டே இருக்கிறோம்.  ஆனால் கிடைக்காமல் உள்ளது.

ஒரு கட்டத்தில் நான் வெறுப்படைந்து விட்டேன். இப்போது வந்த வேலைகளை எல்லாம் ஏற்று  செய்து கொண்டு வாழ்க்கை செல்லும் பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதை ஏன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பம் என சொல்கிறேன் என்றால், நாங்கள் இருவரும் நடிகர்கள் என்பதால் எனக்கு அவரும் அவருக்கும் நானும் தான் அடையாளங்கள். அடையாளம் உணர்வுகள் எல்லாம் உடைந்து எங்கே நிற்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிறோம். நிறைய இடங்களில் இப்படி ஒரு பிரச்சனை நடக்கும் போது தான் நம்முடைய உணர்வுகளின் மதிப்பு என்பது தெரிகிறது” என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரச்சிதா மகாலெட்சுமி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் இருக்கும் சிவன் சிலை முன்பு தியானத்தில் ஈடுபடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும், “உங்கள் பக்கத்தின் கதையை நீங்கள் சொல்வதை காட்டிலும் உங்களுடைய கர்ம வினை சிறப்பாக சொல்லும். அதுவரை அமைதியாக இருப்போம்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
Embed widget