BiggBoss 7 Tamil: வீட்டிற்குள் வந்த வினுஷா பஞ்சாய்த்து! அர்ச்சனாவை பந்தாடிய கமல் - இன்றைய பிக்பாஸில்!
பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 67 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.
ஆனாலும் 5 வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் அதிரடியாக நுழைந்து மக்கள் கருத்துகளை உள்ளே சொல்ல, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னேறியது. மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. அதாவது, அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் முற்றி அளவுக்கு மீறி வார்த்தைகளை விடும் அளவுக்கு சென்றது. அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசிய நிக்சனுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வினுஷா பிரச்னையை பேசிய கமல்:
இந்த நிலையில், இன்றைய எபிசோடுக்கான் ப்ரோமோ வெளியானது. இரண்டாவது ப்ரோமோவில், அர்ச்சனாவுடனான காரசாரமான விவாதத்தில் ”சொருகிடுவேன்” எனக் நிக்சன் கூறியது குறித்து மிகவும் ஆவேசமாக கேட்கிறார். மேலும் கமல் நிக்சன் நீங்கள் சொருகுவதற்கு நான் ஒரு இடம் பார்த்து வைத்துள்ளேன் என “ஸ்ட்ரைக்” கார்டினைக் காட்டுகின்றார். இதனை அடுத்து மூன்றாவது ப்ரோமோவில், நிக்சனிடம் கேள்வி எழுப்பிய கமல், " உங்களுக்கு மற்றும் அர்ச்சனாவுக்கு இடையில் நடந்த விவாதத்தில் என்ன வினுஷா பிரச்னை?" என்று கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த நிக்சன், "நான் செய்த தவறை உணர்ந்துட்டேன். வினுஷாவிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறிவிட்டேன்" என்று சொன்னார். பின்னர், "நான்கு வாரமாக வினுஷா விஷயத்தை பேசாத நீங்கள்(அர்ச்சனா) இப்போ ஏன் பேசுறீங்க?" என்று கேள்வி எழுப்பினார் கமல். மேலும், "உங்கள பாதுகாக்க வினுஷா இல்லை. நீங்களும் (நிக்சன்) அந்த பெண்ணும் (ஐஷு) நெருக்கமா இருந்ததால் தான் ஐஷு வெளியே போனதாக நீங்க (அர்ச்சனா) சொன்னீங்க என்று அர்ச்சனாவிடம் கேட்டார். பின்னர், ”உங்களுக்கு சீட்டு சேராதபோது ஜோக்கர் கார்டா அவங்கள பயன்படுத்திக்க கூடாது" என்று கடுமையாக கமல் பேசியப்படி ப்ரோமோ முடிகிறது.
மேலும் படிக்க