Bigg Boss 7 Tamil: நிக்சனுக்கு ‘ஸ்ட்ரைக்’ கொடுத்த கமல்! உற்சாகத்தில் பூரித்த அர்ச்சனா - அனல் பறக்கும் ப்ரோமோ வைரல்
Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Bigg Boss 7 Tamil: நிக்சனுக்கு ‘ஸ்ட்ரைக்’ கொடுத்த கமல்! உற்சாகத்தில் பூரித்த அர்ச்சனா - அனல் பறக்கும் ப்ரோமோ வைரல் Bigg Boss Tamil Season 7 9th December 2023 - Promo 2 Goes Viral Kamal Hassan Gives Nixen to Strike Card Bigg Boss 7 Tamil: நிக்சனுக்கு ‘ஸ்ட்ரைக்’ கொடுத்த கமல்! உற்சாகத்தில் பூரித்த அர்ச்சனா - அனல் பறக்கும் ப்ரோமோ வைரல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/6c10753fb3e02f81744280e12a01cbaa1702118310240102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 7 Tamil: தமிழ் தொலைக்காட்சிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 7-இன் இன்றைய எப்பிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிக்சனை பங்கம் செய்த கமல்:
இந்த ப்ரோமோவில் போட்டியாளார் அர்ச்சனா உரிமைக்குரல் எழுப்புகின்றார். தொகுப்பாளர் கமல் ஹாசன், போட்டியாளார் நிக்சன் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அதாவது 7ஆம் தேதி வெளியான எப்பிசோடில் மற்றொரு போட்டியாளரான அர்ச்சனாவுடனான காரசாரமான விவாதத்தில் ”சொருகிடுவேன்” எனக் கூறியது குறித்து மிகவும் ஆவேசமாக கேட்கிறார்.
குறிப்பாக ’நிக்சன் நீங்கள் சொருகிடுவேன் எனக் கூறினீர்களே எங்கே சொருகுவீர்கள், இங்கேயா (கமல் தனது வயிற்றினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது மார்பினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது வலது கண்ணை வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் காட்சியைப் போல் காட்டுகின்றார்). இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் கைத்தட்டுகின்றனர். அர்ச்சனா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். மேலும் கமல் நிக்சன் நீங்கள் சொருகுவதற்கு நான் ஒரு இடம் பார்த்து வைத்துள்ளேன் என “ஸ்ட்ரைக்” கார்டினைக் காட்டுகின்றார்.
இதற்கு நிக்சன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக நிற்கின்றார். இந்த ப்ரோமோ தொடர்பாக பிக் பாஸ் ரசிகர்களில் ஒரு பிரிவினர் ‘நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பாமல் கமல் ஸ்ட்ரைக் கொடுத்திருப்பது ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றார்’ என்ற குற்றச்சாட்டினை எழுப்பவைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)