மேலும் அறிய

BiggBoss 7 Tamil: பரபரப்பில் பிக்பாஸ் வீடு! மற்றவர்களை ட்ரிக்கர் செய்கிறாரா அர்ச்சனா? பயங்கர கேம் பிளானா இருக்கேப்பா!

டபுள் கேம் ஆடுவதாகவும்,  ட்ரிக்கர் ஆகும் வார்த்தைகளால் அர்ச்சனா பேசுவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது. இந்த நிலையில் 67வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் முற்றி அளவுக்கு மீறி வார்த்தைகளை விடும் அளவுக்கு சென்றுள்ளது. 

ப்ரோமோவில், நிக்சன் அர்ச்சனாவைப் பார்த்து “இதற்கு நீ லாயக்கில்லை” என்று கூற, அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஒரு பெண்ணை இப்படிலாம் கேவலமா பேசலாமா?” என்று கேட்கிறார். அடுத்த ப்ரோமோவில் அர்ச்சனாவைப் பார்த்து “வைல்டு கார்டு என்ட்ரியாக எப்படி வந்தியோ அப்படியே ஓடு” என்ற நிக்சன், “கருமம் மூஞ்சியைப் பாரேன்.. இதுலாம் ஒரு மூஞ்சியா” எனக் கூறுகிறார். மேலும், இருவருக்குமான வாக்குவாதத்தின் இறுதியில் ‘சொருகிடுவேன்’ என்று அர்ச்சனாவை பார்த்து நிக்சன் கூறுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் நிக்சனுக்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், அர்ச்சனா டபுள் கேம் ஆடுவதாகவும்,  ட்ரிக்கர்  ஆகும் வார்த்தைகளால் அர்ச்சனா பேசுவதாகவும் கருத்துகள் பரவி வருகின்றன. 

டபுள் கேம் ஆடுகிறாரா அர்ச்சனா?

வைல்டு எண்டரியாக வந்த அர்ச்சனா,  முதல் வாரத்தில் அழுதுகொண்டே இருந்துள்ளார். நெகட்டிவாக அவரை சொன்னாலே எமோஷனல் கண்ணீர் சிந்தி வருகிறார் அர்ச்சனா. இதனால் சக போட்டியாளர்கள் இவரை தொட்டாசிணுங்கி எனவும் அழைத்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா சென்ற முதல் வாரம் அழுகையாக இருந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்கள் சீறிப்பாய்ந்தார். விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா போல  தான் அர்ச்சனா என்னும் கருத்து இணையத்தில் வைரலாகி வந்தது. வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும் அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்க ஆதரவு இருக்கிறது.

இருப்பினும்,  அவரது மீது சில விமர்சனங்களும் உள்ளன. அதாவது, எமோஷனல் கேம் ஆடுகிறார், டபுள் கேம் ஆடுகிறார், ட்ரிக்கர் ஆன வார்த்தைகளை விடுகிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்கள் வருகின்றன. உதாரணமாக, நேற்று முன்தினம் நடந்த பொம்மை டாஸ்கில் அர்ச்சனா செய்த வேலை அம்பலமானது. அதாவது, பொம்மை டாஸ்கில் விசித்ராவின் பர்சானலிட்டி பற்றி அர்ச்சனா நெகட்டிவாக புட்டு புட்டு வைத்தார். 

இதற்கு கடுப்பான விசித்ரா ஒவ்வொருவரையாக அழைத்து விசாரிக்கையில், தினேஷ் சொல்லி தான் அர்ச்சனா பேசியதாக தெரிய வந்தது. இதுபற்றி தினேஷிடம்  பேசிய விசித்ரா, "நாம் பொம்மையை ஆன் பண்ணிதான் விட்டேன். அவங்களா தான் மத்த வேலைகளை பார்த்தாங்க" என்றார் தினேஷ். இதனால், அர்ச்சனா மீது விசித்ரா கடும் கோபத்தில் இருந்தார். முன்னதாக, விசித்ராவிடம், "என்னை தினேஷ் தான் பேச சொன்னாரு" என்று கூறிய நிலையில், விசித்ரா கேட்டதற்கு "அவரு என்ன பேச  சொல்லல...என்னோட மனசுல இருக்கறதைல்லாம் சொல்லிடேன்" என்றார்.

இதன்மூலம் அர்ச்சனா டபுள்  கேம் ஆடியது அம்பலமானது.  நேற்றைய எபிசோட்டில் கூட, டீச்சர் டாஸ்க் ஒன்றில் அனைவரையும் டார்கெட் செய்து பேசினாரே தவிற, அதை நகைச்சுவையாக எதையும் செய்யவில்லை. இருப்பினும்,  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது என்பது குறிப்படத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget