மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: விதியா? அறமா? மக்களின் மனங்களை உண்மையில் புரிந்து கொண்டதா பிக்பாஸ்?

பிக்பாஸ் சீசன் 6 பட்டத்தை விக்ரமனோ, ஷிவினோ வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வென்றிருப்பது பல விமர்சனங்களை பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நேற்றுடன் நிறைவு பெற்றது. மற்ற சீசன்களுடன் ஒப்பிடும்போது இந்த சீசன்களில் விறுவிறுப்புகள் குறைவு என்றாலும், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டனர் என்பதே உண்மை.

அதிர்ச்சி அளித்த அசீம்:

கிராண்ட் பினாலே எனப்படும் இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேர் நிற்க விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றி பெற்றார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Bigg Boss 6 Tamil: விதியா? அறமா? மக்களின் மனங்களை உண்மையில் புரிந்து கொண்டதா பிக்பாஸ்?

ஷிவின் வெளியேறியபோது கமல்ஹாசன் கூறிய வார்த்தை, ஷிவினை பாராட்டத் தெரிந்த ரசிகர்கள் அவருக்கு வாக்களிக்க தவறிவிட்டனர் என்று கூறினார். அடுத்தகட்டத்தில் விக்ரமனா? அசீமா? என்று அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில் விக்ரமனுக்கான ஆதரவுக்குரல் அனைவருக்கும் இருந்த நிலையில் அசீம் டைட்டிலை கைப்பற்றினார்.

மனங்களை வென்ற ஷிவின், விக்ரமன்:

இந்த சீசனை தொடக்கம் முதல் பார்த்து வந்த அனைவருக்கும் தெரியும் இறுதிப்போட்டியில் நின்ற விக்ரமனும், ஷிவினும் அசீமை காட்டிலும் இந்த பட்டத்திற்கு மிகவும் தகுதியானவர்கள் என்று தெரியும். இந்த பட்டத்தை ஷிவினுக்கு அளித்திருந்தால் நிச்சயம் இத்தனை முறை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களுக்கே இது ஒரு மகுடமாக அமைந்திருக்கும். ஆனால், வாக்குகள் என்ற அற்ப காரணத்தை கூறி ஷிவினை வெளியேற்றியுள்ளனர்.

Bigg Boss 6 Tamil: விதியா? அறமா? மக்களின் மனங்களை உண்மையில் புரிந்து கொண்டதா பிக்பாஸ்?

இந்த சீசன் தொடங்கியது முதல் ஒரு பத்திரிகையாளராக உள்ளே சென்ற விக்ரமன் அறம் வெல்லும் அறம் வெல்லும் என்ற வார்த்தையை கூறியது மட்டுமின்றி அதுபோலவே நடந்தும் கொண்டார். அவரது செயல்பாடுகளும், அவர் மீது அசீம் கோபத்தை வெளிப்படுத்தியபோதும் அவர் நடந்து கொண்ட மென்மையான போக்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அறம் வென்றதா?

இந்த சீசன் தொடங்கியேபோது ஜி.பி.முத்துவிற்காக பார்க்க வந்தவர்கள் அவர் வெளியே சென்றபிறகு ஷிவினுக்காகவும், விக்ரமனுக்காகவுமே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதல் கோபத்தையும், அநாகரீக பேச்சையும் அதிகளவில் வெளிப்படுத்தி வந்த அசீமிற்கு பட்டத்தை வழங்கியுள்ளது பிக்பாஸ். கேட்டால் அதற்கு காரணம் அவர் பெற்ற அதிக வாக்குகள் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொண்டாலும் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என்றால் விக்ரமன் கடைசி வரை கூறிய அறம் வெல்லும் என்ற வார்த்தை தோற்றுவிட்டதா? உண்மையில் அறம் வென்றதா? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் நேற்று எழுந்துவிட்டது.

மக்களை புரிந்து கொண்டதா பிக்பாஸ்?

விதியா? அறமா? என்றால் அறத்தின் வழி செல்ல வேண்டும் என்பதே நியதி. இந்த நியதி பிக்பாஸ் சீசன் 6 பட்டம் வழங்குவதில் கடைபிடிக்கப்படவில்லை என்பதே நூறு சதவீத உண்மை. மக்களைப் பற்றிய புரிதல், பரவலான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என்றெல்லாம் கூறி வந்த பிக்பாஸ் மக்களை புரிந்து கொள்ளவில்லை என்பதும் 100 சதவீத உண்மை. மேலும், பிக்பாஸ் பட்டத்தை ஷிவினும், விக்ரமனும் வெல்லாவிட்டாலும் மக்கள் மனங்களை அவர்கள் வென்று விட்டனர் என்பதும் 100 சதவீத உண்மை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget