![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Bigg Boss 5 Tamil: ‛ப்ரியங்கா டார்... ப்ளீஸ் ஓப்பன் டோர்...’ பைனல் டிக்கெட் சண்டையில் நிரூப் கொதிப்பு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இன்று ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடுகின்றனர்.
![Bigg Boss 5 Tamil: ‛ப்ரியங்கா டார்... ப்ளீஸ் ஓப்பன் டோர்...’ பைனல் டிக்கெட் சண்டையில் நிரூப் கொதிப்பு! BiggBoss 5 Tamil Promo: Day 85 promo 2 priyanka and niroop fight over ticket to finale task Bigg Boss 5 Tamil: ‛ப்ரியங்கா டார்... ப்ளீஸ் ஓப்பன் டோர்...’ பைனல் டிக்கெட் சண்டையில் நிரூப் கொதிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/5245ae6d67a975c305234678c9b95dae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இன்று ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடுகின்றனர். போட்டியாளர்களுக்கு கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் டின்னர் செட்-அப்பில் ஒவ்வொருத்தர் பற்றியும் போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி இல்லாத ஒருவரை ஒவ்வொருத்தரும் நாமினேட் செய்ய வேண்டும். வழக்கமாக நடத்தப்படும் இந்த டாஸ்க் இந்த சீசனிலும் நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோவில் “நிரூப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டாம்” என் ப்ரியங்கா கமெண்ட் செய்கிறார். இதனால், விவாதத்தில் குதிக்கிறார் நிரூப். “ப்ரியங்கா என்னோடு போட்டி போட முடியாது என சொல்வதால் கதவை திறந்துவிடுங்கள் பிக் பாஸ்” என வெளியேற தயாராகிறார் நிரூப்.
ப்ரியங்கா - நிரூப் சண்டைகள் எல்லாம் புதிதல்ல. இதெல்லாம், ப்ரொமோ கட்ஸ்தான் என்பது ஆடியன்ஸ்க்கு புரிகிறது. அதுமட்டுமல்ல, ப்ரியங்காவும் நிரூப்பும் சண்டைப்போட்டு கொண்டால், அடுத்த எபிசோடோ அல்லது அதே எபிசோடில் மீண்டும் நண்பர்களாகி கொஞ்சுவது தெரிந்த விஷயம் என்பதால் இன்றைய ப்ரொமோவில் காட்டப்பட்டிருப்பதற்கு பின்னால் நடந்தது என்ன என்பது ஷோவில் தெரிய வரும்.
ப்ரொமோ:2
#Day85 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/NOkxsBRkOr
— Vijay Television (@vijaytelevision) December 27, 2021
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)