BiggBoss 5 Tamil Promo: பிக் பாஸ் வீட்டில் அரசியல் மாநாடு: பிரச்சாரம் செய்ய தயாராகும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று அரசியல் கட்சிகளை உருவாக்க வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்திருக்கிறார்.
![BiggBoss 5 Tamil Promo: பிக் பாஸ் வீட்டில் அரசியல் மாநாடு: பிரச்சாரம் செய்ய தயாராகும் போட்டியாளர்கள்! BiggBoss 5 Tamil Promo 2 day 65 BiggBoss 5 Tamil Promo: பிக் பாஸ் வீட்டில் அரசியல் மாநாடு: பிரச்சாரம் செய்ய தயாராகும் போட்டியாளர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/07/56f1d90e1977c3de46d4e04f448ce548_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 65: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை அடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மீண்டும் அபிஷேக் எலிமினேட்டாகி வெளியேறி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் விளையாட்டு, நடைபெற்றது. இதில், கடைசியாக அக்ஷரா, அமீர் போட்டியிட்டர். இதில், அமீர் வெற்றி பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டபோது பாவனி நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டிப்பறித்து கொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 65வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ இன்று வெளியானது.
இதில், பிக் பாஸ் வீட்டிற்குள் ‘அரசியல் மாநாடு’ நடைபெற வேண்டும் என பிக் பாஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்காக, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். குழுக்களாக பிரிய தயாராகும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ், அரசியல் மாநாட்டுக்காக அயுத்தமாகின்றனர்.
ப்ரொமோ:2
#Day65 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/bhkEuXXp74
— Vijay Television (@vijaytelevision) December 7, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)