BiggbossUltimate : இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிக் பாஸ் தெலுங்கு தொகுப்பாளரான நாகார்ஜுனா கிராண்ட் ஃபைனலுக்குப் பிறகு பிக் பாஸ் தெலுங்கு OTT ஐ தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிக் பாஸ் லைவ் தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி ஷோவுக்கான நடிகர்களைத் தேர்வு செய்யத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் 24-7 பிக் பாஸ் தமிழ் OTT தொடங்கப்பட்டது. இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
Disney+ Hotstar launches its first ever OTT exclusive season of #BiggBossTamil, streaming 24x7 from 30th January
— Kaushik LM (@LMKMovieManiac) January 16, 2022
Beginning the year 2022 with the biggest OTT debut, #KamalHaasan will be hosting #BiggBossUltimate too, which fans can watch exclusively on the platform👍
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார், இதை ரசிகர்கள் மேடையில் பிரத்தியேகமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss OTT Tamil version named as #BiggBossUltimate. Here is the logo reveal 🤩👌#BiggBossTamil #BiggBossTelugu5@BiggBossAddict https://t.co/i9638Fz3aF pic.twitter.com/68IHt4zHex
— Gowtham (@gowthamsep12) January 16, 2022
தமிழ் OTT நேரடி ஒளிபரப்பு ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும் என்றும், தெலுங்கு OTT பிப்ரவரியில் ஒளிபரப்ப படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்க தயாரிப்பாளர்கள் பிக்பாஸுல் சில புதுமையான மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியானது 24x7 நேரலை ஒளிபரப்பு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், எடிட் செய்யாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்