இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல; பண பெட்டியை எடுக்காமல் பாதியிலேயே திரும்பிய சவுண்டு ! வீடியோ
பிக்பாஸ் சீசன் 8 இப்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்... சவுந்தர்யா பண பெட்டி டாஸ்கில் கலந்து கொண்டு பாதியிலேயே திரும்பி வந்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக தற்போது 102 நாட்களை எட்டியுள்ளது. இந்த வாரம் 19 ஆம் தேதி, இதன் ஃபைனல் நடைபெற உள்ளது. மேலும் இந்த முறை பிக்பாஸ் தினுசு தினுசாக டாஸ்க் வைத்து, நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் பண பெட்டியை எடுக்க ஓடிய, ஜாக்குலின் 2 வினாடிகள் தாமதமாக வந்ததாக அறிவித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தொடர முடியாது என கூறி, எலிமினேட் செய்தார். நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே போட்டியாளர்களால் தொடர்ந்து எவிக்ட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டு வந்த ஜாக்குலின் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரை தொடர்ந்து இன்றைய தினம்.. சவுந்தர்யாவும் பண பெட்டிக்காக ஓடி உள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் பண பெட்டி அருகே சென்றும் அதை எடுக்காமல் மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஓடி வந்துள்ளார் சவுந்தர்யா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#soundarya Poitu Padhila Return Vandhutaga Money Box Etokkama
— Bigg Boss Vignesh (@BiggBossVignesh) January 16, 2025
Well Play 💥💥💥🤣🤣🤣 Ana Promo La Varala
More Updates Followed By @BiggBossVignesh Thank You#biggbosstamil8 #biggbosstamil pic.twitter.com/Z7iVVsAguf