Bigg Boss Tamil Season 8: இந்த இரு போட்டியாளர்கள் நிஜத்தில் அண்ணன் - தம்பி உறவா? ஃபிரீஸ் டாஸ்கில் வெளியான உண்மை!
பிக் பாஸ் நிகழ்ச்சில் குடும்பத்தினரின் வருகை காரணமாக, இந்நிகழ்ச்சி களைகட்ட தொடங்கிய நிலையில் அருண் மற்றும் முத்துக்குமரன் இருவரும் உறவினர் என்றும், அண்ணன் - தம்பி உறவு என்றும் தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் பிரீஸ் டாஸ்க்:
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8ஆவது சீசன் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் போராக இருந்தாலும் அதன் பிறகு விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது. இன்னும் 3 வாரத்தில் இந்நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில், இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். முதலாவதாக தீபக்கின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர்.
போட்டியாளர்கள் குடும்பத்தினர் வருகை:
இவர்களை தொடர்ந்து ஜெஃப்ரி, முத்துக்குமரன், ஜாக்குலின், அன்ஷிகா, ரயான், ராணவ், என ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் அருணின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, ஒரு ஷாக்கான விஷயத்தை பகிர்ந்துள்ளனர். அதாவது, அருணும், முத்துக்குமரனும் உறவினர் என்றும், இருவரும் அண்ணன் தம்பி உறவுக்காரர்கள் என்றும் கூறியுள்ளனர்.
அருண் - முத்துக்குமரன் அண்ணன் தம்பிகளா?
தொடக்கத்தில் இருந்தே அருண் மற்றும் முத்துக்குமரன் ஒரே அணியாக இருந்த போது அவரை பாராட்டி பேசி வந்த அருண் அதன் பிறகு முத்துக்குமரனை விமர்சிக்க தொடங்கினார். அதற்கு தனக்கு ஆதரவாக, விஷால், சத்யா ஆகியோர் முத்துக்குமரனை டிரோல் செய்தனர். இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த அருணின் பெற்றோர் அருண் மற்றும் முத்துக்குமரன் இருவரும் உறவினர் என்று கூறியிருக்கின்றனர். அருணை நினைத்து தங்களுக்கு கவலை இல்லை என்றும், அவன் 10 பேருக்கு சமம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் காதலன், காதலியை அனுப்பி வைக்க, இதுவரை காதலை மூடி மறைத்த அர்ச்சனா தன்னுடைய காதலர் அருண் தான் என்பதை அப்பட்டமான அறிவித்துள்ளார். அதே போல் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த விஷ்ணுவுக்கு சௌந்தர்யா தன்னுடைய காதலை வெளிப்படுத்தியது அல்டிமேட் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.