மேலும் அறிய
Advertisement
Saravana Vickram: என் அண்ணனை அப்படி சொல்லாதீங்க.. பிக்பாஸ் சரவண விக்ரமின் தங்கை பகிர்ந்த உருக்கமான வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவண விக்ரமுக்கு ஆதவாகப் பேசி அவரது தங்கை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சரவண விக்ரமுக்கு ஆதவாகப் பேசி அவரது தங்கை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவண விக்ரம் பங்கேற்றுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரீயலில் பல ரசிகர்களைக் கொண்ட சரவண விக்ரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆனால், போட்டி தொடங்கியதில் இருந்து ரசிகர்களை விக்ரம் பெரிதாக ஈர்க்கவில்லை என்றும், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடவில்லை என்ற கருத்துமே முன்வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு தனியாக ரசிகர்கள் இருப்பதாகவும், அவர்கள் தன்னை விட மாட்டார்கள் என்றும் விக்ரம் பேசிய வீடியோவை நெட்டிசன்ஸ் கலாய்ந்து ட்ரோல் செய்து வந்தனர். இந்த நிலையில், தனது அண்ணனை ட்ரோல் செய்யும் பதிவுகளுக்கு விக்ரமின் தங்கை வீடியோ பதிவு மூலம் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “என் அண்ணன் அவர் ஃபேன்ஸ் ரொம்ப சப்போர்ட் செய்வார்கள் என்று பேசி இருந்தார். ஆனால், ஒருசிலர் அதை மீம்ஸ் கிரியேட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். என் அண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனான இருந்த போது அவருக்கு நிறைய ஃபேன்ஸ் இருந்தது உண்மை தான். எங்கே சென்றாலும் அவரை நன்றாக அடையாளம் தெரிந்து கொள்வார்கள். என் அண்ணனுக்கு ஃபேன்பேஸ் இருந்தது, இப்பவும் இருக்கு.
View this post on Instagram
ஒருத்தவங்களை பற்றி பாசிட்டிவாக பேசுங்க. இல்லனா விட்ருங்க. இல்லாத ஒரு விஷயத்தை தவறாக உருவாக்கி தவறான செய்தியை ப்ளீஸ் பரப்ப வேண்டாம்” எனப் பேசி இருந்தார். அண்ணனுக்காக விக்ரமின் தங்கை உருக்கமாகப் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: வைல்டு கார்டு என்ட்ரிக்கு வந்த சோதனை.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கானா பாலா!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion