Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிக்ஸன்? .. எல்லாம் அந்த கமெண்ட் தான் காரணம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் வினுஷா தேவியை உருவக்கேலி செய்தததாக நிக்ஸன் மீது புகார் எழுந்துள்ளதால் அவரை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் வினுஷா தேவியை உருவக்கேலி செய்தததாக நிக்ஸன் மீது புகார் எழுந்துள்ளதால் அவரை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொடர்ந்து 7வது ஆண்டாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் முதலில் வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே வந்தனர். இதுவரை 5 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதீப் ஆண்டனி தகாத வார்த்தைகள் பேசியதாகவும், ஆபாசமாக கமெண்ட் அடித்ததாகவும், பெண் போட்டியாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்ததாகவும் கூறி பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
சிக்கிய நிக்ஸன்
இதனிடையே இன்றைய (நவம்பர் 8) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ’இந்த வீட்டில் உள்ள நபர்கள் சொன்ன கமெண்டுகள் காட்டப்படும். அதை சொன்ன நபர்கள் ஏன் சொன்னார்கள்? என்பதை விளக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிக்ஸனிடம் காட்டப்பட்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘வினுஷா வேலைக்காரி. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிர் பெர்ஃபெக்டா இருக்கணும்’ என ஐஷூவிடம் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் கொடுத்த நிக்ஸன், தான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. சத்தியமாக சொல்லவில்லை என தெரிவிக்கிறார். ஆனால் விசித்ரா, வினுஷாவுக்காக நாங்க கேப்போம் என தெரிவிக்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நிக்ஸனை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிரதீப் மீது சக பெண் போட்டியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அனைவரிடம் விசாரணை நடத்தி பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என பெரிதாக சப்போர்ட் செய்த கமல்ஹாசன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.