Bigg Boss Tamil : இருமடங்காக அதிகரித்த பரிசுத் தொகை..பிக்பாஸ் டைட்டில் வெல்பவருக்கு எத்தனை கோடி தெரியுமா!
Bigg Boss Tamil 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் டைட்டில் பட்டம் வெல்பவருக்கு பரிசுத் தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளலாம்

இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் இடையில் மோதல் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்து வருகிறார்கள். அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக எலிமினேட் ஆகி டைட்டில் வின்னர் பட்டத்தை யார் தட்டிச்செல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்பவர்களுக்கு இதுவரையில்லாத பெரிய தொகை பரிசாக அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் தமிழில் டைட்டில் வென்றவர்கள்
பிக்பாஸ் தமிழில் முதல் சீசன் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வெவ்வேறு மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் , சர்ச்சைகள் , காமெடிகள் என திரைப்படத்தை விட சுவாரஸ்யமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருப்பங்கள் இருந்து வருகின்றன . இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து டைட்டில் பரிசு வெல்பவர்களுக்கு மிகப்பெரிய பரிசுத் தொகையுல் அதனுடன் திரைப்பட வாய்ப்புகளும் மக்களிடம் பெரிய அங்கீகாரமும் கிடைத்து வருகிறது.
முதல் சீசனின் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டு ரூ 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகா , மூன்றாவது சீசனில் முகேன் ராவ் , நான்காவது சீசனில் அர்ஜூனன் ஆகியோர் இதே பரிசுத் தொகையை வென்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டது. 6 ஆவது சீசன் டைட்டில் வென்ற முகமது அஜீன் ரூ 60 லட்சம் பரிசுத் தொகை வென்றதாக தகவல்கள் வெளியாகின . தற்போது பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் இந்த பரிசுத் தொகை 1 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிசுத் தொகையை வெல்ல போட்டியாளர்களுக்கு பல்வேறு சவாலான போட்டிகள் கொடுக்கப்பட இருக்கிறது. அதை கடந்து டைட்டில் பரிசை தட்டிச் செல்பவருக்கு ஒரு கோடி பரிசுத் தொகையில் பல்வேறு விளம்பர பட வாய்ப்புகள் மற்றும் பட வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , ரம்யா ஜோ , பிரவீன் காந்தி , பிரவீன் , எஃப்.ஜே. விஜே பார்வதி , நந்தினி, வியானா , கெமி , கானா வினோத் , ஆதிரை , சுபிக்ஷா , அப்சரா சிஜே , விக்கல்ஸ் விக்ரம் , துஷார் , கனி திரு , சபரி , கமருதின் , அகோரி கலையரசன் ஆகிய 20 போட்டியாளர்கள் பெங்கேற்றுள்ளார்கள்.





















