Bigg Boss Tamil 7: என் தங்கம்.. அர்ச்சனாவை கட்டியணைத்த பூரணி அம்மா.. விசித்ராவிடம் பாசமழை.. அதிர்ச்சியில் பூர்ணிமா!
Bigg Boss Tamil 7: பூர்ணிமாவின் அம்மா அர்ச்சனாவை செல்லம் கொஞ்சுவது, விசித்ராவிடம் மன்னிப்பு கேட்பது ஆகிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் பங்குபெறும் இந்த டாஸ்க் அனைத்து சீசன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாஸ்க் ஆகும்.
பிக்பாஸ் 7ஆவது சீசன் (Bigg Boss Tamil 7) தற்போது 79ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மணி, ரவீனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா, அர்ச்சனா, விக்ரம், விஷ்ணு ஆகியோர் விளையாடி வருகின்றனர். இன்னும் 4 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி டாஸ்க்குகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் உணர்ச்சிகரமான டாஸ்க்கான ஃப்ரீஸ் டாஸ்க் (Freeze Task) இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்றைய ப்ரீஸ் டாஸ்க்கில் அதன்படி இந்த டாஸ்க்கில் பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மா, மணி சந்திரா ஆகியோரின் பெற்றோர் வரிசையாகக் கலந்துகொண்டு பிக்பாஸ் குடும்பத்தினருடன் ஆடி, பாடி, குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
பூர்ணிமா, அர்ச்சனா ஆகியோர் ஆரத்தழுவி தஙள் பெற்றோருடன் கண்ணீர் விடும் காட்சி முன்னதாக வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பூர்ணிமாவின் அம்மா அர்ச்சனாவை செல்லம் கொஞ்சுவது, விசித்ராவிடம் மன்னிப்பு கேட்பது ஆகிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் மணியின் அம்மா ரவீனா பற்றி கேட்பது, அர்ச்சனாவின் அம்மா விசித்ராவிடம் மனம் விட்டு பேசுவது ஆகிய காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ஈர்த்துள்ளன.
பொதுவாக Freeze Taskஇல் ஹவுஸ்மேட்ஸ் பங்கேற்கும்போது உணர்ச்சிகரமான காட்சிகளுடன் பல ரணகள மொமண்ட்களும் இடம்பெறும்.
வெளியில் இருந்து பிற போட்டியாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு வந்து அது பற்றி தெரிவித்து தங்கள் பிள்ளைகளை, அக்கா, தங்கைகளை பெற்றோர் எச்சரித்துவிட்டு செல்வர். இதன் பின் பொதுவாக போட்டியாளர்களின் கேம் பிளானே வேறு கோணத்துக்கு மாறிவிடும். இந்நிலையில் இந்த வாரம் என்னென்ன உணர்வுப்பூர்வ தருணங்கள், திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் காத்துள்ளனர்.