Bigg Boss Tamil 7: பூர்ணிமாவை அவாய்ட் பண்ணிடு.. விஷ்ணுவுக்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பம்.. பிக்பாஸில் இன்று!
Bigg Boss 7: நேற்று விஜய் வர்மா, அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு அன்பு பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த Freeze Task நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் பொதுவாக பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராகக் கலந்துகொள்வார்கள்.
இந்த முறை சற்று வித்தியாசமாக அனைத்து குடும்பங்களையும் ஒன்றாக இந்த சீசனில் அனுப்பி குடும்பங்களின் பாச மழையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண்பித்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்று மணி, விஜய் வர்மா, அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு அன்பு பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மற்றொருபுறம் அர்ச்சனாவுக்கு கள்ளிப்பால் கொடுத்திருக்க வேண்டும் என நிக்சன் போறபோக்கில் சொன்னதை அர்ச்சனாவின் அப்பா கண்டித்து நேற்று கவனமீர்த்தார்.
இந்நிலையில் இன்று நிக்சன், விஷ்ணு ஆகியோரின் பெற்றோர் கலந்துகொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக நிக்சன் அப்பா கலந்துகொண்டு நிக்சனுக்கு இதுலாம் வேண்டும் என்ற விதத்தில் கலகலப்பாகப் பேசிய ப்ரொமோ வெளியானது.
தற்போது விஷ்ணுவின் குடும்பத்தார் கலந்துகொண்டு அவருக்கு அறிவுரை சொல்லும் ப்ரொமோ வெளியாகியுள்ளது. பூர்ணிமா பற்றி விஷ்ணுவிடம் பேசும் அவரது சகோதரி, “ சிலரை அறவே தவிர்த்து விடு, அவங்க நட்பு (மாயா - பூர்ணிமா நட்பு) ரொம்ப நல்லா இருக்கு, அதுக்குள்ள நீ போகாம இருப்பது நல்லது” என்கிறார். தொடர்ந்து பூர்ணிமா அவர்களிடம் பேசும்போது, நான் விஷ்ணுவிடம் அதிகம் பேசியதில்லை எனக்கூற விஷ்ணுவின் சகோதரி முறைத்துப் பார்க்கிறார்.
இந்த ப்ரோமோ வெளியாகி இன்றைய எபிசோட் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பிக்பாஸ் போட்டி தற்போது 80ஆவது நாளை எட்டியுள்ளது. இன்னும் 4 வாரங்களே பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள நிலையில் போட்டியாளர்கள் டைட்டில் ஜெயிக்கும் முனைப்பில் தங்கள் அத்தனை திறமைகளையும் வெளிக்காட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஃப்ரீஸ் டாஸ்க் நடப்பதால் உணர்ச்சிகரமாகவும் பல சுவாரஸ்ய திருப்பங்களும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுமார் 80 நாள்களை பிக்பாஸ் வீட்டில் கழித்துள்ள போட்டியாளர்கள், தங்கள் குடும்பத்தினரைப் பார்த்த பிறகு இனி கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள். சிலர் தங்கள் கேம் பிளானையே மாற்றக்கூடும்.
ஏற்கெனவே டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான முன்கூட்டிய போட்டிகள் சென்ற வாரமே தொடங்கிவிட்ட நிலையில், வரும் வாரம் டிக்கெட் டு ஃபினாலே வாரமாக அனல்பறக்க செல்லும். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்ததில் கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது விக்ரம், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, மணி, ரவீனா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா, நிக்சன் என பிக்பாஸ் வீட்டில் வெறும் 11 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: "மனிதாபிமானத்துடன் நடந்துக்கோங்க" விக்ரமிடம் வருத்தப்பட்ட அர்ச்சனா தந்தை - பிக்பாஸில் நடந்தது என்ன?