Bigg Boss 7 Tamil: 'இங்க இப்படியெல்லாம் பேசாதீங்க' லெப்ட், ரைட் வாங்கிய அர்ச்சனா பெற்றோர்.. திணறிய நிக்சன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 78 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பைனலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சி உள்ளதால், போட்டியாளர்கள் இடையே போட்டி கடுமையாகி உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்ததில் கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் வெறும் 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். அப்படி ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் டாஸ்க் என்றால் ஆது Freeze Task தான். இந்த டாஸ்க்கின்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரை பார்க்கும்போது போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க அவர்கள் ஆரத்தழுவி வரவேற்பது காண்போரை கண்கலங்க செய்யும்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக Freeze Task நடைபெறுகிறது. அதாவது, ஒரே நேரத்தில் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வீட்டில் செல்கின்றனர். இது சம்பந்தமான வீடியோக்களுக்கு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நிக்சனை லெப்ட் ரைட் வாங்கிய அர்ச்சனா பெற்றோர்:
இந்த நிலையில், நிக்சனிடம், அர்ச்சனாவின் தந்தை பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ”உங்களிடம் (நிக்சன்) ஒன்று சொல்லணும். இவங்கள (அர்ச்சனா) அப்போவே கள்ளிப்பால் ஊற்றி கொல்லணும் என்று நீங்கள் சொன்னிங்க. எனக்கு அது ரொம்ப வேதனையாக இருந்தது. மன்னிப்பு கேட்கிறேன். நான் சொன்னது உங்களுக்கு கஷ்டமா இருந்தது என்றால் மன்னிப்பு கேட்கிறேன்.
நீங்க கோபத்தில் தான் சொன்னீங்க. எனக்கு வேதனையா இருந்தது. ஒரு நிகழ்ச்சியில் இந்த மாறி இழிவான வார்த்தைகளை இங்கு பயன்படுத்த வேண்டாம். இதை நீங்க அவங்கிட்ட சொல்லவில்லை. பின்னாடி பேசிட்டு இருந்தீங்க" என்று நிக்சனிடம் கூறினார் அர்ச்சனாவின் தந்தை.
#VJArchana father about "Kallipal Oothi kollanum" comment on #Archana 😐
— BB Mama (@SriniMama1) December 19, 2023
He said it was hurting 🙌👏👏#BiggBossTamil7#BiggBoss7Tamil#BiggBoss7
pic.twitter.com/ho6gitVOG7
மற்றொரு வீடியோவில், "அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது உனக்கு (நிக்சன்) ஆதரவு கொடுக்கனும் தான் இருந்தார். அவன் மட்டும் பழைய சோறு சாப்பிட்டுட்டு இருக்கான். இதை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று கேட்கணும்” என்று சொன்னார். இப்படியெல்லாம் நினைத்து தான் இங்கு வந்தார். ஆனால், நீ (நிக்சன்) அவங்கள (அர்ச்சனா) வேறு மாறி பார்த்தாய்" என்று நிக்சனிடம் அர்ச்சனா தாய் கூறினார். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.