Bigg Boss 7 Tamil: "மனிதாபிமானத்துடன் நடந்துக்கோங்க" விக்ரமிடம் வருத்தப்பட்ட அர்ச்சனா தந்தை - பிக்பாஸில் நடந்தது என்ன?
பூர்ணிமா, விக்ரம், அர்ச்சனா, விஷ்ணு உள்ளிட்டவர்களின் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பைனலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சி உள்ளதால், போட்டியாளர்கள் இடையே போட்டி கடுமையாகி உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்ததில் கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் வெறும் 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். அப்படி ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் டாஸ்க் என்றால், அது Freeze Task தான். இந்த டாஸ்க்கின்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக Freeze Task நடைபெறுகிறது.
”மனிதாபிமானத்துடன் நடந்துக்கோங்க"
அதாவது, பூர்ணிமா, விக்ரம், அர்ச்சனா, விஷ்ணு உள்ளிட்டவர்களின் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர். இது சம்பந்தமான வீடியாக்களுக்கு இணையத்தில் வெளியானது. இந்த நிலையில், அர்ச்சனாவின் தந்தை, மனவருத்தத்துடன் விக்ரமிடம் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், "கொஞ்சமாச்சும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.
அர்ச்சானாவிற்கும் விசித்ராவிற்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டபோது, அர்ச்சனா கண்கலங்கியபடி பேசியதை ஆக்ஷயாவுடன் இணைந்து நீங்கள் (விக்ரம்) கலாய்த்தீர்கள். இந்த சூழலில் ஆறுதலாக இல்லாவிட்டாலும், அர்ச்சனாவை மேலும் புண்படுத்தாமல் இருக்கலாம். ஒருவரின் கஷ்டங்களில் இப்படி கிண்டல் செய்ய வேண்டாம். இது எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. விளையாட்டாக இருந்தாலும், ஒருவரை கிண்டல் செய்தது தவறு தான்.
#Archana father to #Vickram
— BB Mama (@SriniMama1) December 19, 2023
You mocked my daughter's cry that was wounding more for us ✌️🙌#VJArchana #BiggBossTamil7#BiggBoss7Tamil pic.twitter.com/v9XLZ859Sy
இதனை அடுத்து, அர்ச்சனாவின் தந்தைக்கு விளக்கம் கொடுக்க முயற்சித்த விக்ரம், ”நான் விளையாட்டாக தான் செய்திருப்பேன். அந்த சூழ்நிலையை லேசாக்கவே தான் முயன்றதாக” கூறினார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா தந்தை, "வருமானத்திற்காக செயல்படும் நிலையிலும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். விளையாட்டிற்காக இதை செய்தாலும் தவறானது தான்" என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க