மேலும் அறிய
Bigg Boss 7 Tamil Vichitra: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ரா - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
Bigg Boss 7 Tamil Vichitra: விசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு எலிமினேஷன் இருக்கும் என்பதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ரா
Bigg Boss 7 Tamil Vichitra: பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா எலிமினேஷ் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, , அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.
பிக்பாஸ் போட்டியின் முதல் நபராக நாளில் அனன்யா வெளியான நிலையில் அடுத்த வாரத்தில் பவா செல்லதுரை விருப்பத்தின்பேரில் வெளியேறினார். அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற, பிரதீப் மட்டும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது.
ரூ.1 லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு ரூ.16 லட்சமாக உயர்ந்ததால், அதை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறினார். இதனால், தற்போது பிக்பாஸ் வீட்டில், விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதாலும், போட்டியாளர்களை கமல் சந்திப்பதும் உள்ளது.
இன்றைய தினம் எவிக்ஷன் பிராசஸ் இருப்பதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலை முதல் எவிக்ஷனுக்கான ஷீட்டிங் தொடங்கி விட்டதாகவும், பிக்பாஸ் போட்டியாளர்கள் அதற்கு தங்களை தயார்ப்படுத்தி கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே விஷ்ணு பைனலிஸ்ட்டுக்கு சென்றிருப்பதால், அவரை தவிர எஞ்சிய 6 பேரில் யார் எவிக்ட் ஆக போவது என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து விசித்ரா வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
ஆரம்பத்தில் ஜோவிகாவுடன் சண்டையில் விசித்ராவின் கேம் தொடங்கினாலும் சில வாரங்களுக்கு முன்பு வரை அவருக்கான பாசிட்டிவ் வைப் இருந்தது. ஆனால், கடந்த வாரம் தினேஷின் பர்சனல் லைஃப் குறித்து பேசிய விசித்ரா தினேஷை சீண்டி நெகட்டிவ் பெயர் வாங்கி வந்துள்ளார். இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. விசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு எலிமினேஷன் இருக்கும் என்பதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது மணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் படம் மீண்டும் ரிலீஸாகுது.. இந்தத் தியேட்டர்களில் அனுமதி இலவசம் மக்களே..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion