மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil Dance: பிக்பாஸ் வீட்டில் பேயாட்டம் ஆடிய அர்ச்சனா! தனுஷ்கே டஃப் கொடுத்த நிக்சன்!
Bigg Boss 7 Tamil Dance: அர்ச்சனாவுக்கு திமிரு படத்தில் வரும் ஈஸ்வரி கெட்டப் கொடுக்கப்பட்டது. ஈஸ்வரியாக நடித்த அர்ச்சனா, தகதகவென ஆடவா... சிவசக்தி சக்தி என ஆடவா...பாடலுக்கு நடனமாடி அதிர வைத்தார்.
Bigg Boss 7 Tamil Dance: பிக்பாஸ் வீட்டில் பேயாட்டம் ஆடிய அர்ச்சனாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி அப்லாஸ்களை அள்ளி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 73வது நாளை கடந்துள்ளது. ஓவ்வொரு வாரமும் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சென்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். முதல் வாரத்தில் அனன்யா வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் வெளியேறினார். அடுத்ததாக விஜய் வர்மா என ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அர்ச்சனா அசத்தல் ஆட்டம்:
எப்பொழுதும் பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தை என்டர்டெயின்மெண்டாக மாற்ற நினைத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டான்ஸ் மாரத்தான் போட்டியை அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு நடிகர்களின் கேரக்டர் கொடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த வகையில், அர்ச்சனாவுக்கு திமிரு படத்தில் வரும் ஈஸ்வரி கெட்டப் கொடுக்கப்பட்டது. ஈஸ்வரியாக நடித்த அர்ச்சனா, தகதகவென ஆடவா... சிவசக்தி சக்தி என ஆடவா...பாடலுக்கு நடனமாடி பிக்பாஸ் வீட்டையே அதிர வைத்தார்.
#Archana and #vickram both Dance 🔥🔥
— 𝗩𝗮𝗺𝗽𝗶𝗿𝗲 (@vampire_offc) December 14, 2023
Well done 👍✅ #BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7 pic.twitter.com/66wDR0Z4JT
இதேபோல் தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடலுக்கு தனுஷ் போல் ஆடிய நிக்ஷன் ரசிகர்களின் பாட்டாட்டை பெற்றார்.
Nixen eh pidikala thaan. But this performance is good 👍. He nailed it.#BiggBossTamilSeason7 | #BiggBossTamil7 | #BiggBoss7Tamil | #BiggBoss7
— BiggBoss7Tamil (@thisisbarathi) December 13, 2023
pic.twitter.com/SCFEYdURSH
விக்ரம் மற்றும் நிக்ஷன் வா ராஜா வா...லுங்கிய தான் ஏத்தி கட்டு...அதாரு அதாரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு பிக்பாஸ் வீடாரையும் ஆட வைத்தனர்.
#Nixen overshadowend the Professional dancer #Vijay 😳 🔥
— Mr. Nobody Das 🧊🔥🗿 (@Mr_Nobody_das) December 14, 2023
His energy through out that song 💥#Mani semmaya aaduran la 😂🙌#biggbosstamil#biggboss7tamil #BiggbossTamil7
pic.twitter.com/OUSEX5op9c
ஐஸ்வர்யா ராய் வேஷம் போட்ட மாயா, ஜீன்ஸ் படத்தில் வரும் தக தக திம் பாடலுக்கு ஆட, அவருடன் இணைந்து விக்ரம், பூர்ணிமா, அர்ச்சனா உள்ளிட்டோரும் நடனமாடி அசத்தினர்.
#Maya Dance Performance As jeans vaishnavi
— Sekar 𝕏 (@itzSekar) December 13, 2023
Rate Maya performance out of 10?#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggBosspic.twitter.com/5XvYkaF0Ky
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion