மேலும் அறிய

Bigg Boss Shanthi: ‛மைனா வந்த பின் பிக்பாஸ் வீட்டில் குரூப் உருவாகிடுச்சு...’ வெளியேறிய சாந்தி ஓபன் டாக்!

ஏராளமான நெருங்கிய நண்பர்கள் இருக்கையில் அங்கு உண்மையான விளையாட்டு என்பது இருக்காது. நண்பர்களுக்காக ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் இடத்தில் உண்மையான போட்டிக்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கும்.

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 6 மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இரண்டாவது வாரமான கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ஸ் மாஸ்டர் சாந்தி மற்ற நாமினேட்டட் போட்டியாளர்களை விடவும் குறைந்த வாக்கு எண்ணிக்கையால் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். நெட்டிசன்களின் யூகம் படி முதலில் எலிமினேட் செய்யப்பட்டது வயதில் மூத்த போட்டியாளர் தான் என்ற ஃபார்முலா இந்த சீசனிலும் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. 

சாந்தி பேட்டி :

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் எலிமினேஷன் செய்யப்பட்ட டான்ஸ் மாஸ்டர் சாந்தி வீட்டில் இருந்து வெளியேறிய உடன் ஒரு நேர்காணலின் போது வீட்டினுள் நடக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக விஜய் டிவி ஸ்டார் மைனா நந்தினியின் என்ட்ரி குறித்து அவர் கூறிய சில விஷயங்கள் பிக் பாஸ் ரசிகர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. 

Bigg Boss Shanthi: ‛மைனா வந்த பின் பிக்பாஸ் வீட்டில் குரூப் உருவாகிடுச்சு...’ வெளியேறிய சாந்தி ஓபன் டாக்!

மைனா குரூப் :

சாந்தி கூறுகையில் "மைனா இந்த பிக் பாஸ் சீசனில் ஒரு போட்டியாளர் என்ற தகவல் ஏற்கனவே எனக்கு தெரியும். வீட்டிற்குள் சென்ற போது அவர் இல்லை. ஆனால் அவர் என்ட்ரியாவார் என்று எதிர்பார்த்தேன். மைனாவின் என்ட்ரி சற்று வித்தியாசமாகவே தோன்றியது. ஏனென்றால் அவருக்கு வீட்டினுள் இருந்த போட்டியாளர்கள் பல பேர் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அனைவரும் மாமா, மச்சான்ஸ் என்று தான் ஒருவரை ஒருவர் அழைத்து கொள்கிறார்கள். ஏராளமான நெருங்கிய நண்பர்கள் இருக்கையில் அங்கு உண்மையான விளையாட்டு என்பது இருக்காது. நண்பர்களுக்காக ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத் தானே செய்யும். அப்படி இருக்கும் இடத்தில் உண்மையான போட்டிக்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கும். அஜீம், மணி, ரக்ஷிதா, அமுதவாணன் என ஒரு குரூப் ஃபார்ம் ஆகி விட்டது" என்றார் சாந்தி. 

குட்டிஸ் குரூப் :

மேலும் அவர் கூறுகையில் "இவர்கள் அனைவரும் ஒரு குரூப் என்றால், குட்டிஸ் பட்டாளம் ஒரு தனி குரூப். ஷெரின், குயின்சி, அசல், நிவா இப்படி அவர்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருக்க தனலட்சுமி, ஆயிஷா இருவரும் ஒரு தனி செட் என ஒரு குரூப்பிஸம் உருவாகி விட்டது பிக் பாஸ் வீட்டிற்குள்" என்றார் சாந்தி.

ஏஜ் ஃபேக்டர் ஒரு காரணமா ?

சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணமாக கூறப்பட்டது ஏஜ் ஃபேக்டர். இது குறித்த கேள்விக்கு நச் என்ற ஒரு பதிலை கூறினார் சாந்தி. "வயது வெறும் நம்பர் தான். நான், ஜி.பி. முத்து அண்ணா வயசானவங்க என்றாலும் இதுவரையில் ஒரு தடவை கூட டாக்டர் கிட்ட போனதில்லை. ஆனால் இந்த குட்டிஸ் எல்லாம் தினமும் டாக்டரிடம் போனார்கள். தலைவலி, சளி, காய்ச்சல், இருமல் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி செல்வார்கள். நான் ஒரு நாள் முழுக்க நிக்க சொன்ன கூட நின்னுக்கிட்டே வேலை செய்வேன். எனக்கு டிஸ்க் பிரச்சனை இருக்கும் இருந்தாலும் கிச்சனில் முழு நேரமும் நின்னுக்கிட்டே தான் வேலை செய்தேன். நான் ஒரு முறை கூட கால் வலிக்குது டாக்டர் கிட்ட போகணும் என்று சொன்னதே இல்லை. இப்ப சொல்லுங்க யாரு வயசானவங்க. அதை ஒரு குறையா சொல்வது நியாயமில்லை. மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று சிறப்பாக விளையாடுவேன்" என்றார் சாந்தி. 

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget