Bigg Boss Diwakar: நம்ம சந்தோஷத்துக்கு யாரையும் காயப்படுத்தக் கூடாது.. பாடம் எடுத்த வாட்டர்மெலன் ஸ்டார் - யாருக்கு?
நமது மகிழ்ச்சிக்காக யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று பிக்பாஸ் திவாகர் சக போட்டியாளருக்கு அறிவுரை கூறினார்.

பிக்பாஸ் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் இன்ஸ்டாகிராம் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பங்கேற்றுள்ளார். சர்ச்சைக்குரிய பதிவுகள், யூ டியூப் பேட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த திவாகருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆதரவு அதிகரித்து வருகிறது.
திவாகர் - ப்ரவீன்ராஜ்:
குறிப்பாக, சக போட்டியாளர்களில் சிலர் அவருடன் சண்டையிடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளதாலும், அவர்களை அவர் எதிர்கொள்ளும் விதமும் அவருக்கு செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் எதற்கு உள்ளே இருக்கிறார்கள் என்று இருவரை கூறும்படி பிக்பாஸ் கேட்டபோது, திவாகர் ப்ரவீன்ராஜ் மற்றும் இயக்குனர் ப்ரவீன்காந்தி இருவரையும் கூறினார். அதற்கு அவர் அளித்த விளக்கம் குறித்து கீழே காணலாம்.
💯 out of 100
— Ram (@ramvikramda) October 10, 2025
Crystal clear. Sirppa sollitaru #Diwakar
1st 👏👏 to him #BiggBoss9Tamil #BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #BiggBossTamilpic.twitter.com/Ua9SsnQ4Lz
வார்த்தை கடினம்:
தம்பி ப்ரவீனை நான் வந்தது முதலே பார்த்துவிட்டேன். சண்டை நடந்து நாம் பேசித் தீர்ப்பது வேறு. இல்லாத பிரச்சினையை உருவாக்குவதும், உருவாக்குன பிரச்சினையை பெரிதாக்குவதும் அந்த மாதிரி விஷயங்கள்தான் பெரும்பாலும் செய்கிறார். நானும், ரம்யாவும் பேசிக்கிட்டு இருந்தபோது பேட் வேர்டா என்று பெரிதாக்குகிறார். அது எனக்கு அநாகரீகமாக தெரிந்தது.
ஒருவர் மீது பழி சுமத்த வேண்டும் என்று சொல்வது சரியா? நான் கண்ணாடி முன்னாடி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் எங்க வீட்டு முன்னாடி ஒருத்தர் இப்படி நடப்பாருனு சொன்னாரு. அந்த வார்த்தை ரொம்ப கடினமாக இருந்தது. கேட்டால் தமிழ் தெரியவில்லை என்கிறார். இது சிறிய விஷயம்.
காயப்படுத்தக் கூடாது:
நம்ம சந்தோஷம் யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது. வார்த்தைகள் தடிப்பாக பயன்படுத்தக் கூடாது. இயற்கையாக நாம் செய்வது வேறு. வேண்டுமென்றே செய்வது வேறு. இல்லாத பிரச்சினையை உருவாக்குவதும், அதை பெரிதாக்குவதும். பெண்களிடம் அதிக மெச்சுரிட்டி உள்ளது.
இப்படியே போனால் இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும். அது மக்களுக்கும் தெரியும். இது இயற்கைக்கும், பிக்பாஸ் ஆடிஷனுக்கும் கெட்ட பெயர் ஆகும். இயற்கையாக உருவாக்குவது வேறு, செயற்கையை உருவாக்குவது வேறு.
இவ்வாறு திவாகர் கூறினார்.
பிக்பாஸ் சீசன் தொடங்கியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியவர் திவாகர். ஏனென்றால், எதிர்மறை விமர்சனங்களால் பிரபலமான திவாகர் இணையத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டவர். இந்த சீசன் தொடங்கியது முதலே திவாகருக்கும், ப்ரவீனுக்கும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.
சீசன் தொடங்கிய இரண்டாவது நாளே குறட்டை விட்டதற்காக ப்ரவீன், திவாகருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இயக்குனர் ப்ரவீன்காந்தியிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல செயல்படவில்லை என்று ப்ரவீன்காந்தியை திவாகர் விமர்சித்தார்.





















