Bigg Boss 9 Tamil: நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல.. விஜய் சேதுபதியை சீண்டிய FJ.. பிக்பாஸில் வெடித்த மோதல்!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் 20 போட்டியாளர்கள் நேரடியாகவும், 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான FJ காட்டிய அணுகுமுறையை கண்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி கடுப்பானார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்கள் நேரடியாகவும், 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே வந்தனர்.
அதில் தற்போது FJ, கானா வினோத், அமித் பார்கவ், திவ்யா, சாண்ட்ரா, பிரஜின், வியானா, விக்கல்ஸ் விக்ரம், கனி திரு, கம்ருதீன், பார்வதி, திவ்யா ஜோ, அரோரா, சுபிக்ஷா, சபரி நாதன் உள்ளிட்டோர் உள்ளே விளையாடி வருகின்றனர். மற்ற சீசன்களை விட இந்த சீசன் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட டாஸ்கை சரியாக விளையாடாமல் சண்டை போடுவதில் தான் குறியாக உள்ளார்கள் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
வியானாவுடன் உருவான புது உறவு
இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 வாரமாக கேப்டனாக FJ தேர்வு செய்யப்பட்டார். முதல் வாரம் சரியாக செயல்பட்ட அவர், இந்த வாரம் சக போட்டியாளரான வியானாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். வீட்டின் கேப்டன், இந்த வார ஸ்கூட் டாஸ்க்படி அவர் துணை வார்டன் என இரண்டு வேடம் செய்ய வேண்டும். ஆனால் வேலை செய்யாமல் முழுக்க முழுக்க வியானாவுடன் நெருக்கம் காட்டி வந்தது சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் வார இறுதி எபிசோடில் வீட்டு தலையாக சரியாக செயல்படாத FJவை விஜய் சேதுபதி சரமாரியாக சாடினார். அவரின் கேப்டன்ஸி பற்றி மற்றவர்களிடம் கேட்டபோது அனைவரும் குற்றம் சாட்டிய நிலையில் வியானா மட்டும் FJவுக்கு பதிலாக விளக்கம் கொடுக்க அதனை விஜய் சேதுபதி கண்டித்தார்.
பிக்பாஸில் வெடித்த மோதல்
இதனிடையே விஜய் சேதுபதி FJவிடம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் என கேட்க, ஆரம்பத்தில் தடுமாறிய அவர், பின்னர் தான் இரண்டு கேரக்டர்களை செய்ததால் குழப்பமடைந்ததாக கூறினார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத விஜய் சேதுபதி உங்களிடம் பேசி வேஸ்ட் என்பது போல உட்கார சொன்னார். இதற்கிடையில் ஏற்கனவே அவர் தன்னை கடுமையாக விமர்சித்ததால் கடுப்பில் இருந்த FJ அந்த கோபத்தை தன்னுடைய நடத்தை மூலம் வெளிக்காட்ட விஜய் சேதுபதி அப்செட் ஆகி விட்டார்.
ஒரு தப்பை மூடி மறைத்தோ, தொகுப்பாளர் கிட்ட கவுண்டர் கொடுத்தோ பேசுவது கெத்து கிடையாது. பிரயோஜனம் இல்லை. இது உங்களுக்கு நல்லது இல்லை என FJவுக்கு அவர் அட்வைஸ் கொடுத்தார். எனினும் FJ காட்டிய ஆட்டியூட் எதிர்த்து பேசுவது போல இருந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.





















