Bigg Boss 7 Tamil: சகோதரன் உறவை கொச்சைப்படுத்தாதீங்க.. எல்லை மீறிய நிக்ஸன் - ஐஷூ செயலால் கடுப்பான சனம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஐஷூ மற்றும் நிக்ஸன் செயல்பாடுகளை நடிகையும், முந்தைய போட்டியாளர்களில் ஒருவருமான சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஐஷூ மற்றும் நிக்ஸன் செயல்பாடுகளை நடிகையும், முந்தைய போட்டியாளர்களில் ஒருவருமான சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7வது ஆண்டாக தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் முதலில் வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் அனன்யா ராவ், பவா செல்லத்துரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.
அதேசமயம் பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரீ வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட கடும் சர்ச்சையான சம்பவங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சில தினங்கள் முன்பு நிக்ஸன் - ஐஸூ இடையேயான காட்சிகள் எல்லை மீறும் வகையில் அமைந்திருந்தன.
நடுவில் கண்ணாடி இருக்க இருவரும் எதிரெதிர் பக்கங்களில் இருந்து முத்தமிட்டு கொண்டனர். மைக்கை கழற்றிவைத்து விட்டு வேறுவிதமாகவும் பேசியது ரசிகர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் முந்தைய போட்டியாளரும், நடிகையுமான ஷனம் ஷெட்டி நிக்ஸன் - ஐஸூ செயலுக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில், “தம்பி தம்பின்னு சொல்லி இன்னைக்கு வேற மாதிரி போயிடுச்சி. இது நான் ஐஸூவுக்கு மட்டும் சொல்லவில்லை. எல்லோருக்கும் தான் சொல்கிறேன். சகோதரன் - சகோதரி உறவு என்பது புனிதமானது. உடன் பிறந்த அண்ணன், தம்பியாக இல்லாவிட்டாலும் ஒருவர் மீது அந்த உணர்வு வந்துவிட்டால் அந்த அன்பு தூய்மையானது.
ஆனால் அந்த உறவை கொச்சப்படுத்திட்டு இருக்காங்க. இதற்கு முந்தைய சீசன்களிலும், மொத்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க அண்ணா, அண்ணா என சொல்லி விட்டு, வெளியே போய் பாய் ஃப்ரண்ட் ஆகி சுத்திட்டு இருக்காங்க. அதைப் பார்த்து தான் இதனை சகஜமாக எடுத்துக் கொண்டு இவர்களும் அப்படி நடந்து கொள்கிறார்கள். ரொம்ப கேவலமா இருக்கு. நான் ரொம்ப உறுதியா சொல்கிறேன். நிக்ஷன் - ஐஸூ மட்டுமல்ல யாருமே இப்படி பண்ணாதீங்க” எனத் தெரிவித்துள்ளார்.