Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் வீட்டின் வில்லனாக மாறும் விஷ்ணு விஜய்.. மாயாவை தொடர்ந்து சண்டைக்கு சென்ற பிரபலம்..!
Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களான விஷ்ணு விஜய் மற்றும் பூர்ணிமா இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 3வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களான விஷ்ணு விஜய் மற்றும் பூர்ணிமா ரவி இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனால் இன்னும் 3 மாத காலங்களுக்கு ரசிகர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீடு அதகளமாக மாறி வருகிறது. இளம் போட்டியாளர்கள் இருப்பதால் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் தான் ஏற்படுகிறது.
இந்த ப்ரோமோவில் "Know your Housemates" என்கிற டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில் இதில் பூர்ணிமா ரவி மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பங்கேற்கின்றனர். இதில் பேசும் பூர்ணிமா, கூல் சுரேஷ் பேச்சைக் குறிப்பிட்டு, “இது விவாத நிகழ்ச்சி. என்னுடைய பாயிண்டை அவரும், அவருடைய பாயிண்ட்டை நானும் விமர்சிக்க வேண்டும். கூல் சுரேஷ் ஏதோ மேடை பேச்சாளர் மாதிரி நான் இதை பண்ணேன், அதை பண்ணேன் என சொல்றாரு” என தெரிவிக்கிறார்.
#Day3 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 4, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/OCO9yqvk2w
தொடர்ந்து விஷ்ணு விஜய்யிடம் பேசும் பூர்ணிமா ரவி, “கொஞ்சம் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்க” என தெரிவிக்கிறார். இதைக் கேட்டு பேசும் விஷ்ணு, “டாஸ்க் முடிந்ததும் இவங்க சில விஷயங்களை முன் வைக்கிறார்கள். நீ சொன்னதை ஃபாலோ பண்ணனும்னா எல்லோரும் அதை பண்ணுவாங்க. ஆனால் என்ன புரிதலோ அதுதான் இந்த கேம்” என கூறுகிறார். இதனால் கடுப்பாகும் பூர்ணிமா, “எடுக்குறதும், எடுக்காததும் அவங்கவங்க விருப்பம். சண்டை போடுற ஐடியால நான் இல்ல” என தெரிவித்து விட்டு நேராக மாயாவிடம் செல்கிறார். அங்கே, ”என்னதான் இருந்தாலும் நீ தோத்துட்டன்னு சொல்றாரு. அது என்ன நோக்கத்துல வரும்” என கேட்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆக மொத்தம் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டின் வில்லனாக விஷ்ணு விஜய் மாறிவிட்டதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.