Bigg Boss 6: 'அசலை வெளியேற்றியது நியாயமே இல்ல...’ பிக்பாஸை கடிந்த நிவாஷினி!
Bigg Boss 6 Tamil:பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் அசல் கோலார் எவிக்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்த கருத்தினை நிவாஷினி கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன்-6
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள்
பிப் பாஸ் ஹவுசில் போட்டியாளர்களிலிருந்து, ஆடியன்ஸ் வரை அனைவரையும் கவர்ந்தவர் ஜிபி முத்து. பல சண்டைகள் வந்தாலும், அனைத்தையும் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்ற இவர், தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாத செய்தியை கேள்விப்பட்டவுடன், மனம் நொந்து போய்விட்டார். இதனால்,பிக் பாஸ் இல்லத்திலிருந்து தானாக முன்வந்து வெளியேறினார்.
சென்ற வாரம், நடிகை சாந்தி பிக்பாஸ் இல்லத்திலிருந்து ’எவிக்ட்’ செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, அடுத்து யாரை காலி செய்யலாம் என காத்திருந்த பார்வையாள்கள், பிக் பாஸ் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு பல நாட்களாக தொல்லையாக இருந்த அசல் கோலாரின் மீது கரம் வைத்தனர். நேற்றைய எபிசோடில், மிக கம்மியான ஓட்டு வாங்கிய காரணத்தால், அசல், எவிக்ட் செய்யப்பட்டார்.
View this post on Instagram
கதறிய நிவாஷினி
அசல், பிக்பாஸ் இல்லத்தில் இருந்த சமயத்தில், அவருடன் ஒன்றாக சுற்றித் திரிந்தவர் நிவாஷினி. அசல் வெளியேறும் விஷயத்தை கேள்வி பட்டதும் அவரை அழுது கொண்டே சென்ட் ஆஃப் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில் அசலை எவிக்ட் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை என நிவாஷினி பேசியுள்ளார். பிக் பாஸிடம் நிவாஷினி பேசுவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், அசீம் ரூடாக பேசுவதாகவும் இது போட்டியாளர்களின் மனநிலையைக் கெடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் செய்யும் சில விஷயங்கள் தன்னை பாதிப்பதாக கூறும் அவர், “I feel that, Asal’s Eviction was Unfair” என கருத்து தெரிவித்துள்ளார்.
#Nivashini as showing over attitude to #BiggBoss during nominations .
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) October 31, 2022
Niva : Biggboss I want to nominate #Azeem but yepudiyum neenga avara eliminate panamatinga ..its unfair you elimated #Asal 😂😂#BiggBossTamil6 pic.twitter.com/x3hpnF1gXb
இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள், “பிக் பாஸையே இந்த பொன்னு எதிர்த்து போசுதே…” என ஆச்சரியப்படுகின்றனர்.