Bigg Boss 6 Tamil Promo: நேற்று டீ, காபி... இன்னைக்கு சாம்பாரா? பிக்பாஸில் தொடரும் உணவுச் சண்டை!
Bigg Boss 6 Tamil Promo : இன்றைய நிகழ்ச்சியில், கொஞ்சம் கோவம் கொஞ்சம் அழுகை கொஞ்சம் என மொத்தமாக எமோஷனல் எபிசோடாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Bigg Boss 6 Tamil Promo : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
View this post on Instagram
இப்போது வெளியான ப்ரோமோவில், மகேஷ்வரியும் தனலட்சுமியும் சாம்பாருக்கு சண்டை போட்டுக்கொள்கின்றனர். லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று மகேஷ்வரி கேட்டதுக்கு நீங்க லூசு மாறி பேசாதீங்க என்று முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு பதில் கொடுக்கிறார் தனலட்சுமி . பின், மகேஷ்வரி
கேள்வி கேக்கனும் என்று கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும் என கேட்க, அதற்கு பதிலடியாக நீங்க எப்பவேண்டுமானலும் செய்வதை திங்க முடியாது என கூறினார் தனலட்சுமி .கோவாமான மகேஷ்வரி, “ இது எங்க இஷ்டம் இது பிக்பாஸ் வீடு நீங்க இததான் சாப்பிட வேண்டும்"என சொல்கிறார்.
இன்று காலை வெளியான ப்ரோமோவில், ஜனனி ஆயிஷாவை பார்த்து, இவருடன் எனக்கு சண்டை வரலாம் என்று சொல்ல, அதற்கு எமோஷனல் ஆனா ஆயிஷா கத்த ஆரம்பித்தார். பின் நேற்று போல் இன்றும் அழ தொடங்கினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு பக்கம் ஜி.பி முத்துவினால் கலகலவென இருந்தது, மறுபக்கம் டீ காபிக்கு சண்டை இழுத்து ரணகளம் ஆனது. இன்றைய நிகழ்ச்சியில், சாம்பருக்கு சண்டை எழுந்துள்ளது. இதனால் இன்று, கொஞ்சம் கோவம் கொஞ்சம் அழுகை கொஞ்சம் என மொத்தமாக எமோஷனல் எபிசோடாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil Episode 4 Promo: வச்சு செய்யும் போட்டியாளர்கள்.. கதறி அழும் ஆயுஷா.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!