Bigg Boss Dhanalakshmi Profile: பைத்தியம்னு சொல்லிருக்காங்க.. டிக்டாக் டூ பிக்பாஸ்.. தனலட்சுமியை ஞாபகம் இருக்கா?
Bigg Boss 6 Tamil Dhanalakshmi Profile:பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக்டாக் மூலம் பிரபலமான ஈரோட்டைச் சேர்ந்த தனலட்சுமி பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக்டாக் மூலம் பிரபலமான ஈரோட்டைச் சேர்ந்த தனலட்சுமி பங்கேற்றுள்ளார்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.
View this post on Instagram
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் இதுவரை ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி ஆகியோரோடு டிக்டாக் புகழ் தனலட்சுமியும் பங்கேற்றுள்ளார்.
View this post on Instagram
ஈரோடு மாவட்டம் பவானியைச் பிரபல டிக்டாக்கரான சுகி தேவி என்கிற தனலட்சுமி சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம் இருந்த நிலையில் டிக்டாக் தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமானார். டிக்டாக் தடைக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யத் தொடங்கி அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமே 4 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.