Bigg Boss 5 Tamil: விஷ பாட்டில் முதல் டம்மி பீஸ் வரை - பிக் பாஸ் விருதுகள் முழு விவரம்
முகத்திற்கு நேராக கருத்துகளை சொல்ல தைரியம் இல்லாமல் தனி தன்மையை இழந்து விளையாடும் இரண்டு போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் தேர்வு செய்தனர். இதில், ராஜூவும் அண்ணாச்சியும் தேர்வு செய்யப்பட்டனர்.
Bigg Boss 5 Tamil Day 40: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ஆம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
நேற்று பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. முதல் பாகத்தில், பாசிடீவான விருதுகள் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் நெகடீவ் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், முகத்திற்கு நேராக கருத்துகளை சொல்ல தைரியம் இல்லாமல் தனி தன்மையை இழந்து விளையாடும் இரண்டு போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் தேர்வு செய்தனர். இதில், ராஜூவும் அண்ணாச்சியும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக கார்டன் ஏரியாவில் அமர வைத்து, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களது தலையில் தண்ணீர் ஊற்றினர். இது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியது.
விருதுகள் விவரம்:
ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி – நிரூப்
அந்த சரஸ்வதியே உனக்கு பதில் பரீட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்டடா – அபினய்
பண்றது மோசம் இதுல பாசம் வேற – இமான் அண்ணாச்சி
If you are bad, I am your dad – ப்ரியங்கா
நீ புடுங்கிறது பூராமே தேவையில்லாத ஆனிதான் – ராஜூ
ஓப்பனிங் எல்லாம் நல்லாயிருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையே – அபினய்
பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் – நிரூப்
நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே – அபினய்
நானும் ரெளடிதான் – இமான் அண்ணாச்சி
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல – ப்ரியங்கா
லாங்ல பாத்தா காமெடியா இருப்பன், கிட்டத்துல பாத்தா டெரர்ரா இருப்பன் – இமான் அண்ணாச்சி
இவ்ளோ நடக்குதே மிக்சர் சாப்பிடுறீங்க – ராஜூ பாய்
சில பேரு சொல்லிட்டு செய்வாங்க, செஞ்சிட்டு செய்வாங்க – வருண்
புல் தடுக்கி பைல்வான் – இசைவாணி
செட் ப்ராபர்டி – ஐக்கி பெர்ரி
அழுமூஞ்சி – மது
ஜால்ரா – ப்ரியங்கா
ஜவ்வு மிட்டாய் – இசைவாணி
சகுனி – வருண்
டம்மி பீஸ் – ராஜூ
தொட்டாச்சிணுங்கி – இசைவாணி
விஷ பாட்டில் – அக்ஷரா
போலி – வருண்
வெத்து வேட்டு – இமான் அண்ணாச்சி
சிம்ளி வேஸ்ட் - நிரூப்
ப்ரொமோ:3
#Day40 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/oEY0iU7nau
— Vijay Television (@vijaytelevision) November 12, 2021
ப்ரொமோ:2
#Day40 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/H1DsOTIaN9
— Vijay Television (@vijaytelevision) November 12, 2021
ப்ரொமோ:1
#Day40 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/imf84Y6esY
— Vijay Television (@vijaytelevision) November 12, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்