மேலும் அறிய
Advertisement
Big Boss 7 Tamil: ”ஐஷூ வெளியே வந்தால் செருப்பால அடிப்பாங்க..” : மனைவிக்காக பொங்கி எழுந்த விசித்ரா கணவர்..
ஐஷூவ அவரோட அப்பா அடிக்கணும். ஐஷூ என்னோட பொண்ணாக இருந்தால் கண்டிப்பாக நான் அடிப்பேன். ஐஷூ பண்ண வேலைக்கு அவரோட அப்பா, அம்மா எங்க போய்ட்டு மூஞ்சிய வச்சிப்பாங்க.
Big Boss 7 Tamil: ”ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், அவரது பெற்றோர் செருப்பால் அடிப்பார்கள்” என்று விசித்ராவின் கணவர் பேசியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் பிரதீப்புக்கு ஆதரவாக பேசும் விசித்ரா, அர்ச்சனாவுக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண் போட்டியாளர்கள் கூட்டணி அமைத்து சண்டையிட்டு வரும் நிலையில், பிக்பாஸ் குறிவித்து ரிவீயூ செய்த வனிதா விஜய்குமார், விசித்ரா படித்து மருத்துவர் பட்டம் வாங்கவில்லை என்றும், 2 நாட்கள் மட்டுமே கிளாஸ்க்கு சென்று டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் விமர்சித்திருந்தார். அவரின் இந்த விமர்சனத்துக்கு விசித்ரா கணவர் ஷாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஷாஜி, “பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு வரும் காசில்தான் விசித்ரா வாழணும் என்ற அவசியம் இல்லை. விசித்ராவுக்கு சொந்தமாக 4 கார் இருக்கு. எதுல வேண்டுமானாலும் அவங்க போகலாம். விசித்ரா, பிஹெச்டி படிக்காமல் 2 நாள் வகுப்புக்கு சென்று வாங்கிவிட்டார் என வனிதா கூறியுள்ளார். படிச்சவங்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். படிக்காமல் இருந்து என்ன வேணாலும் பேசி விடலாம். பொறாமையில் வனிதா பேசுகிறார். விசித்ராவின் பிஹெச்டி சான்றிதழ் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பவர்கள் அதை ஸ்கேன் செய்து விசித்ரா படித்து டாக்டர் பட்டம் வாங்கினாரா, இல்லையா என்று தெரியும்.
விசித்ரா 2 புத்தகங்களை எழுதியுள்ளார். இது வனிதாவுக்கு தெரியுமா..? கீழ்த்தரமாக பேசுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜோவிகா தமிழ் படிக்கும் வீடியோவை வனிதா வெளியிட்டார். அடுத்த 2 வாரத்தில் பிக்பாஸ் தமிழ் படிக்க சொன்னபோது, தெரியாது என ஜோவிகா கூறினார். யாரை வனிதா விஜயகுமார் முட்டாளாக்க பார்க்கிறார்.
பிக்பாஸ் வீட்டிக்குள் ப்ரீ பிரதீப், போஸ்ட் பிரதீப் என உள்ளது. பிக்பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் உள்ளது. லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், பிக்பாஸ் வீட்டில் நடப்பது மக்களுக்கு தெரியும். மக்களை ஏமாற்ற முடியும். பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என கூறிய ஐஷூ, 2 நாளுக்கு முன்னாடி பிரதீப்பை கட்டிப்பிடித்து கொண்டிருந்தார். ஐஷூ வெளியே போனால் அவரோட பெற்றோரே செருப்பால அடிப்பாங்க.
ஐஷூவ அவரோட அப்பா அடிக்கணும். ஐஷூ என்னோட பொண்ணாக இருந்தால் கண்டிப்பாக நான் அடிப்பேன். ஐஷூ பண்ண வேலைக்கு அவரோட அப்பா, அம்மா எங்க போயிட்டு மூஞ்சிய வச்சிப்பாங்க. பிக்பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் இருப்பதும், உலகமே பிக்பாஸ் வீட்டை பார்ப்பதும் அக்ஷயாவுக்கு பிரச்சனை இல்லையாம், ஆனால் பிரதீப் இரவில் எழுந்து உட்கார்ந்து பார்ப்பது மட்டுமே அவருக்கு பாதுகாப்பு இல்லை என்கிறாரே.
பிக்பாஸ் வீட்டின் முதல் நாளில் இருந்து மாயாவும், பூர்ணிமாவும்தான் கேமை பிளான் செய்து விளையாடுகிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்கு கேப்டனே தேவையில்லையே. மாயா ரவுடிசம் செய்கிறார். 100 நாளுக்கு பிறகு வெளியே வந்து மக்களை சந்திக்க வேண்டும். அது தெரியாமல் இப்படி பண்றாங்க. நிக்சனும், மணியும் பிக்பாஸ் வீட்டில் லவ் பண்றதை தவிர வேற ஒன்னுமே பண்ணல. ஆரம்பத்தில் இருந்து பிரதீப் டஃப் போட்டியாளராக இருந்ததால், அவர் மீது தவறான புகார் கூறி மற்றவர்கள் வெளியே அனுப்பியுள்ளனர்” என விமர்சித்துள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion