Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் நான்காவது முறையாக தேம்பி அழுத அர்ச்சனா.. விசித்திராவால் வந்த வினை!
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் தொட்டதுக்கெல்லாம் கண்ணில் ரெடியாக கண்ணீரை வர வைக்கும் அர்ச்சனா இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 32ஆவது நாளான நேற்று மீண்டும் தொடங்கியது அர்ச்சனாவின் அழுகைக் காட்சி. இது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக இரண்டு போட்டியாளர்களை எவிக்ட் செய்த பிக்பாஸ் அதே நேரத்தில் தடாலடியாக ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களை ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே இறக்கி கெத்து காட்டினார். அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகையான விஜே அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த நாள் முதல் இன்று வரை தினம் அழுகைக் காட்சியை ஒரு முறையவது அரங்கேற்றி விடுகிறார். அர்ச்சனாவுக்கு சமைக்கத் தெரியாது என்பதை வைத்து ஒரு பெரிய சீன் கிரியேட் செய்கிறார் விசித்திரா. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அனைவரையும் நேரடியாக ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து கூடவே விசித்திராவையும் அவர்களுடன் சேர்த்து அனுப்பியது தான் விசித்திரா காண்டாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.
ஒரு கட்டத்தில் அர்ச்சனாவின் இம்சை தாங்க முடியாமல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் ஜிம்னாஸ்டிக் எல்லாம் செய்து எகிறி குதித்தார் விசித்திரா. அர்ச்சனா பேசியே கொல்கிறார் என்பது தான் விசித்திராவின் டென்ஷனுக்கு மிக முக்கியமான காரணம்.
பிக்பாஸ் வீட்டிற்கு எகிறி குதித்த விதித்திரா தன்னைப் பற்றி பேசி திட்டி கொண்டு இருக்கிறார் என்பதை அர்ச்சனா புரிந்து கொண்டாலும் அழுகையை அடக்கி கொண்டு சமாளிக்க முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் இருவருமே பேசி சமரசம் செய்து கொள்கிறார்கள். "ஒரே விஷயத்தை எத்தனை தடவ தான் பேசுவ? எனக்கு உன் மேல கோவம் எல்லாம் இல்ல. எனக்கு தான் பொறுமை போச்சு" என விசித்திரா அர்ச்சனாவிடம் ஓபன் அப் செய்ய "அது என்னுடைய உரிமை மேம்" என மீண்டும் மல்லுக்கட்டினார் அர்ச்சனா.
அர்ச்சனாவின் பக்கம் நியாயம் இருந்தாலும் சொன்னதையே திரும்பி திரும்பி பேசிக்கொண்டே இருந்தால் விசித்திரா மட்டும் இல்லை யாராக இருந்தாலும் பைத்தியம் தான் பிடிக்கும். வாக்குவாதத்தை மீண்டும் அர்ச்சனா தொடங்க, காண்டான விசித்திரா சமைப்பதைத் தவிர நான் வேற எந்த வேலையும் செய்ய மாட்டேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுகிறார். இந்த மாமியார் மருமகள் சண்டைகளை சீரியல்களில் தான் பார்க்கிறோம் என்றால் பிக்பாஸ் வீட்டிலுமா என நொந்து கொள்கிறார்கள் ரசிகர்கள்.
அழுதுகொண்டே துடப்பத்துடன் பாத்ரூமுக்குள் போகிறார் அர்ச்சனா. இத்துடன் அர்ச்சனா நான்காவது முறையாக பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆனதில் இருந்து அழுதுவிட்டார். உண்மையிலேயே இந்தப் பொண்ணு பாவப்பட்ட பொண்ணா? இல்லை இது எல்லாம் அவளுடைய கேம் பிளானா என புரியாமல் கன்ஃப்யூஷனில் இருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.