Bigg Boss Tamil 8 : களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டுக்குள் நுழையும் டிடிஎஃப் வாசன்
பிக்பாஸ் தமிழ் 8 ஆவது சீசனில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி போட்டியாளராக கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
![Bigg Boss Tamil 8 : களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டுக்குள் நுழையும் டிடிஎஃப் வாசன் bigg boss season 8 ttf vasan and his girl friend are in talks for contestants Bigg Boss Tamil 8 : களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டுக்குள் நுழையும் டிடிஎஃப் வாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/4ca50fdacfe1b6050f330c6c935f8f781718179890682572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் சீசன் தமிழ்
வருடந்தோறும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக ஐ.பி,எல் ஒரு பக்கம் இருந்து வருகிறது என்றால் இன்னொரு பக்கம் பிக்பாஸ். தமிழ், இந்தி , தெலுங்கு , கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். தமிழைப் பொறுத்தவரை இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பலர் இன்று சினிமாவிற்கு நடிகர் நடிகைகளாக உருவாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாயா கிருஷ்ணன் , பூர்ணிமா ரவி , கூல் சுரேஷ் , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்களை செய்து ரசிகர்களை என்டர்டெயின் செய்தார்கள் .
பிக்பாஸ் தமிழ் 8 ஆவது சீசன்
தற்போது இந்த ஆண்டு பிக் பாஸ் 8 ஆவது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. யாரைப் பிடித்து பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டால் சர்ச்சையாகும் , ரசிகர்களின் ஆர்வத்தை தூணட முடியும் என்பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் இந்த ஆண்டு டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிஎஃப் வாசன்
யூடியுப் தளத்தில் பைக் வீடியோ வெளியிட்டு 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமான டி.டி.எஃப் வாசன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அனுமதியின்றி ஃபேன்ஸ் மீட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது . பொது இடத்தில் பைக்கில் வீலிங் செய்து கைதானது , என தொடர் சர்ச்சையில் சிக்கிய டி.டிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். டி.டி.எஃப் வாசன் கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்றபோது வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி, அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணா நகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” - என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது
அதே நேரம் வாசனின் காதலியான ஷாலின் ஸோயா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக கலந்துகொள்வது குறித்து என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)