Bigg Boss 7 Tamil: புவா.. அவர நாமினேட் பண்றேன்.. எழுத்தாளர் பெயர் தெரியாமல் பிக் பாஸையே குழப்பிய விஷ்ணு!
Bigg Boss Season 7 Tamil: பிக் பாஸிடம் “புவாவை நாமினேட் செய்கிறேன்” என விஷ்ணு சொல்லும் நிலையில், “புவானு இங்க யாரும் இல்லையே” என பிக் பாஸ் சொல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சில் தன் சக போட்டியாளரும் எழுத்தாளருமான பவா செல்லதுரை பெயர் தெரியாமல் சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கன்ஃப்யூஸ் ஆன சம்பவம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபல ரியாலிட்டி ஷோவாகவும் பலதரப்பு மக்கள் பார்த்து ரசிக்கும் ஷோவாகவும் உள்ளது பிக்பாஸ் (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தொடங்கி விட்டாலே பொதுவாக அடுத்த மூன்று மாதங்களுக்கு தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று விஜய் டிவியில் தொடங்கியது. நேற்று மாலை 6 மணி முதல் 11 மணி வரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில், 18 போட்டியாளர்களை தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
18 போட்டியாளர்கள்
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்த சீசனில் முதன்முறையாக பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. பிக்பாஸின் இந்த ட்விஸ்ட் ரசிகர்களை அட சொல்ல வைத்து எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது!
பிக்பாஸை குழப்பிய விஷ்ணு விஜய்!
மற்றொருபுறம் பிக் பாஸ் 24x7 ஒளிபரப்பில் நடைபெறும் சம்பவங்கள் இணையத்தில் வழக்கம்போல் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் போட்டியாளர் விஷ்ணு விஜய், எழுத்தாளரும் தன் சக போட்டியாளருமான பவா செல்லதுரையில் பெயர் தெரியாமல் நாமினேஷன் ப்ராசஸில் குழம்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி குபீர் சிரிப்பை வரவழைத்துள்ளது.
பிக்பாஸிடம் “புவாவை நாமினேட் செய்கிறேன்” என விஷ்ணு சொல்லும் நிலையில், “புவானு இங்க யாரும் இல்லையே” என பிக்பாஸ் சொல்கிறார். அதற்கு “புவா சந்திரன்... அவரு தான் ஸ்மால் பாஸ் வீட்ல இருக்காரே” என விஷ்ணு சொல்ல, “எனக்கு புரியல.. அவர் தோற்றத்த விளக்குங்க” என பிக்பாஸ் சொல்கிறார்.
அதற்கு “அவர் அப்பா மாதிர் இருப்பாரு... வெள்ளை தாடி வச்சிருப்பாரு.. ரைட்டர்” என விஷ்ணு சொல்ல, “அவரு பவா செல்லதுரை” என பிக்பாஸ் ஸ்ட்ரிக்ட்டாக காமெடி பண்ண, விஷ்ணு நெளிகிறார்.
#BiggBossTamil7 Funny moment:
— Ahamed Inshaf (@InshafInzz) October 2, 2023
Buva Chandran aam🤣 #VishnuVijay
Bro nice 😂
Neengalum pakkalana paarunga🤣 #BiggBoss strict ah irundhu comedy pannitaru #Bava #BiggBossTamil #BiggBoss7tamil#BiggBossTamilSeason7 pic.twitter.com/CGLNgwWUJ7
இந்த வீடியோ “நாமினேஷன்னா என்னங்கய்யா” எனக் கேட்ட கஞ்சா கருப்பு, கமல்ஹாசனிடம் முதல் நாளே காமெடி பண்ண ஜி.பி.முத்து ஆகிய காட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

