மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Title Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னரான விவசாயி.. வரலாற்றை மாற்றி எழுதிய போட்டியாளர்!
Bigg Boss 7 Title Winner: பிக்பாஸ் போட்டியின் தொடக்கத்தில் இருந்து வரவேற்பைப் பெற்ற இவர் கடைசியாக டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சத்தை வென்றுள்ளார்.
Bigg Boss 7 Title Winner: பிக்பாஸ் போட்டியில் விவசாயி ஒருவர் டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சத்தை வென்றுள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜூனாவும் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 7 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கமல்ஹாசனுக்கு எதிராக பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதில் தொடங்கி, மாயாவுக்கு ஆதவாக பேசுவது, அரசியலுக்காக பேசுவது, பூர்ணிமாவை சாடுவது என கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழைப் போல் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் நடந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7ஐ நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். தமிழ் பிக்பாஸை போல் தெலுங்கு பிக்பாஸில் திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் யூடியூப் பிரபலங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பங்கேற்ற பல்லவி பிரசாத் என்ற யூடியூப் பிரபலமான ஒருவர், தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளார். விவசாயம் தொடர்பான யூ டியூப் சேனலை நடத்தி வரும் பல்லவி பிரசாத், தனக்கான ஃபாலோவர்ஸை அதிகமாகக் கொண்டுள்ளார். தெலங்கானாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பல்லவி பிரசாத், தன்னுடைய யூடியூப் சேனலில் விவசாயம் தொடர்பான வேலைகளைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்தார்.
தன்னை ஒரு விவசாயின் குழந்தை என்று கூறிக் கொள்ளும் பல்லவி பிரசாத், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பிரபலமாகியுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து வரவேற்பை பெற்ற இவர், கடைசியாக டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரைப் பிரபலம் இல்லாத ஒருவர், டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சம் வென்றிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
#PallaviPrashanth is the Season 7 WINNER.
— BiggBossTelugu7 (@TeluguBigg) December 17, 2023
Congratulations 🔥👏👏#Amardeep ended as Runner-up. 👏👏#BiggBossTelugu7 #BiggBossTelugu7GrandFinale #BiggBoss7Telugu #Nagarjuna pic.twitter.com/4ZoIFpWBvI
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: கரப்பான்பூச்சியால் வந்த வம்பு.. விக்ரமுக்கு ஆதரவாக மாயாவை ‘நறுக்’ கேள்வி கேட்ட கமல்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion