மேலும் அறிய

Bigg Boss Grand Finale: என்ன பொறுத்தவர பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்தான்.. கமல் முன் போட்டு உடைத்த கூல் சுரேஷ்!

Bigg Boss Grand Finale: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தாங்கள் கற்றது என்ன பெற்றது என்ன என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே (Bigg Boss Grand Finale) விழாவில் கலந்துகொண்ட  போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றது என்ன பெற்றது என்ன என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறிய போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றதும் பெற்றதும் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்கள்.

பூர்ணிமா

பிக்பாஸ் வீட்ல நான் கத்துகிட்டது வெளிய எனக்கு ரொம்ப ஹெல்ப் பன்னுச்சு.. எல்லா நேரமும் என்ன- பத்தி எல்லார்கிட்டயும் நான் போய் விளக்க வேண்டியது இல்லனு நான் புரிஞ்சுகிட்டேன். வீட்டுக்குள்ள இருக்க 15 பேருக்கு நான் எப்போவும் என்ன பத்தி புரிய வைக்க ட்ரை பன்னுவேன். ஆனா வெளிய கோடிக்கணக்கான மக்கள் என்ன பத்தி என்ன நினைக்கிறாங்கனு என்னால மாத்த முடியாதுனு நான் புரிஞ்சுகிட்டேன். நம்மளோட செயல் மட்டும் பேசுனா போதும்” என்றார்.

விசித்திரா

”வெளியே எனக்கு ரெண்டு விதமான ரெஸ்பான்ஸ் வந்தது. நிறைய லவ் நிறைய மரியாதை எனக்கு கிடைச்சது, நான் நெனச்சத என்னால் பன்ன முடிஞ்சது. ஆனா பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு தோல்விதான். என்னால் முடிஞ்ச வரைக்கும் நான் நேர்மையா இருந்திருக்கேன். இங்க இருக்க கொஞ்ச பேரு என்ன புரிஞ்சிருக்காங்க” என்றார்.

விஜய் வர்மா

”பிக்பாஸ் வீட்டவிட்டு வெளிய போனதும் தான் எனக்கு இவ்வளவு பெரிய ஆதரவு இருக்குனு தெரிஞ்சது. என்ன நினைச்சு நான் ரொம்ப பெருமப்படுறேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து நான் பொறுமையா இருக்கறத தான் கத்துகிட்டேன்” என்றார் 

நிக்ஸன்

” சிலர் ரொமப் திட்டுறாங்க. சிலர் பாராட்டுறாங்க. நான் வெளிய எங்கயும் போகல அப்டியே போனாலும் ஒரு 6 பாட்டு வரையும் எழுதிட்டேன், சீக்கிரமா ரிலீஸ் பன்னிடுவேன்” என்றார்.

பிராவோ

”எங்க வீட்ல எல்லாம் ஆஸ்கர் வாங்குனாலும் சின்னதாக தான் ரியாக்‌ஷன் இருக்கும். ஆனால் இந்த தடவ நிஜமாவே எனக்காக அவங்க பக்கத்து வீட்ல சொல்லி எனக்கு வாக்குப் போட சொன்னாங்க. என்ன சுத்தி இருக்க எல்லா பக்கத்தையும் பாக்கனும்னு நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.

வினுஷா

” வினுஷா என்ன எல்லாம் அனுபவிச்சானு என்ன விட வெளிய ரசிகர்கள் புரிஞ்சுகிட்டாங்க. எனக்கு நிறைய அன்பு கிடைச்சது. இந்த வீட்ல வெறும் நல்லவங்களா மட்டும் இருந்தா அது போதாதுனு நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.

விக்ரம்

“பிக்பாஸ் வீட்ல நான் பெற்றது நல்ல நட்பு. சில நேரம் எந்த சண்டையிலயும் தலையிடாம நான்  தனியா போய்டுவேன். ஆனால் அந்த இடத்துல எல்லாம் நான் பேசியிருக்கனும்னு கத்துகிட்டேன்” என்றார்.

அக்‌ஷயா

” எனக்கு நல்லதும் கெட்டதும் வெளிய இருந்தது. வெளிய நிறைய அம்மா அக்கா எல்லாம் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தாங்க. நிறைய எடத்துல நான் எனக்காக பேசலனு நான் புரிஞ்சுகிட்டேன். அதுதான் நான் இங்க வந்து கத்துகிட்டேன். இப்போ நான் எனக்காக பேச தொடங்கியிருக்கேன்” என்றார்.

ரவீனா

”எல்லாரும் சொல்ற மாதிரி என்ன பத்தி நல்லது கெட்டது ரெண்டு விதமான கருத்தும் இருந்தது, ஆனால் சமூக வலைதளங்கள் பார்த்து தான் என்ன பத்தி என்ன சொல்றாங்கனு நான் தெரிஞ்சுகிட்டேன். ஆனால் மக்கள நேர்ல சந்திக்கும்போது  நிறைய அன்ப அவங்க கொடுத்தாங்க. சமூக வலைதளத்துல தான் வீட்ல உட்கார்ந்து புரளி பேசுற மாதிரி பேசிகிட்டு இருக்காங்கனு தெரிஞ்சது. அதனால நமக்காக உண்மையான அன்பா இருக்கவங்க நிறைய பேர் கிடைச்சிருக்காங்க. இந்த வீட்ல நான் எனக்காக எந்த இடத்துல பேசனும் எந்த இடத்துல விட்டுக் கொடுக்கனும் தெரிஞ்சுகிட்டேன்.

அனன்யா

"நிறைய அன்பும் நிறைய வெறுப்பும் எனக்கு வந்தது. ஆனால் நான் நேரில பார்க்கும்போது ஒருத்தவங்க பத்தி முழுசா தெரிஞ்சுக்காம நாம அவங்கள பத்தி தப்பா எதுவும் நினைச்சுட கூடாதுனு நான் தெரிஞ்சுகிட்டேன்" என்றார்.

ஜோவிகா

”நமக்காக பேசுறது அவ்ளோ கஷ்டமா இருக்கும், அதே நேரத்துல நமக்காக பேசுறவங்களுக்கும் அது அவ்வளவா கஷ்டமா இருக்கும். ஆனால் நமக்காகவும் பேசி அவங்க கூடயும் நம்ம நிக்கனும் அதுதான் இந்த வீட்ல நான் கத்துகிட்டேன்.”

கூல் சுரேஷ்

”பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் வரதுக்கு முன்னாடி என்ன யார் பாத்தாலும் தலைவானு கத்திட்டு போவாங்க.ஆனா இப்போ என்ன யார் பாத்தாலும் பெரியவங்க கூட கார நிறுத்து ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போவாங்க. ரொம்ப தேவையில்லாத இடத்துல பேசாம தேவையான இடத்துல மட்டும் பேசனும்னு நான் கத்துகிட்டேன். நான் தியேட்டர்ல போய் கத்துறத பாத்து எல்லாரும் நான் ரொம்ப கோவக்காரன்னு நினைச்சுகிட்டாங்க. ஆனா இப்போதான் நான் கல்லுக்குள் ஈரம் சிப்பிக்குள் முத்துனு தெரியுது. இங்க இருந்து நான் ரிலீஸாகி போனதும் எனக்கு இருந்த ஒரு சில பகையெல்லாம் கூட சரியாகிடுச்சு.

என்ன பொறுத்தவரைக்கும் பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்தான். அது ஒரு நூலகம் மாதிரி தான். அதுகுள்ள போய் நம்ம எந்த புத்தகம் எடுத்து படிக்கிறோமோ அதுதான் முக்கியம். என்னோட வாழ்க்கைக்கு தேவையான விஷயத்த எடுத்து படிச்சுட்டு வந்திருக்கேன். பிக் பாஸ் மற்றும் மக்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்.”

கானா பாலா

” வீட்டோட அடங்கி இருக்கனும் அதுதான் இங்க வந்து நான் கத்துகிட்டேன் . 13 உலகநாடுகளுக்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கமலுக்கு நன்றி” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Ranveer Allahbadia Controversy:  யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Ranveer Allahbadia Controversy: யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Embed widget