இவ்வளவு கேவலமாவா பண்ணுவீங்க?” - வீடியோ போட்டவர்களை கிழித்த அபிஷேக்கின் முன்னாள் மனைவி
பிக்பாஸ்-5 போட்டியாளரான அபிஷேக் கடந்த 2017-ல் தீபா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணமான இரண்டு வருடத்திலேயே தீபாவும் அபிஷேக்கும் புரிந்துணர்வுடன் மணமுறிவு செய்துகொண்டனர்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் ஐந்தாவது சீரிஸ் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இதில் போட்டியாளராகப் பங்கேற்றிருப்பவர்களில் ஒருவர் பிரபல வி.ஜே. அபிஷேக். இவரது முன்னாள் மனைவி பேசியதாக அண்மையில் ஒரு யூ ட்யூப் ஊடகத்தில் பகிரப்பட்டு வந்தது. இதற்கு அவரது முன்னாள் மனைவி தனது இன்ஸ்டாகிராமில் தற்போது ’மீடியாக்கள் இவ்வளவு கீழ்த்தரமானதா?’ எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ்-5 போட்டியாளரான அபிஷேக் கடந்த 2017ல் தீபா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணமான இரண்டு வருடத்திலேயே தீபாவும் அபிஷேக்கும் புரிந்துணர்வுடன் மணமுறிவு செய்துகொண்டனர். அண்மையில் அபிஷேக் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் பிரபல யூட்யூப் சேனலின் டாக்ஸ் ஆஃப் சினிமா என்கிற நிகழ்ச்சியில் பிக்பாஸ் அபிஷேக் பேசியதாக தீபாவின் பழைய நேர்காணல் ஒன்று பகிரப்பட்டிருந்தது. அது பல்வேறு வியூஸ்களையும் பெற்றிருந்தது.
இந்த காணொளி தனது மனதைப் புண்படுத்துவதாக உள்ளதாக தீபா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர்,’மூன்று வருடங்களுக்கு முன்பு எனது திருமண வாழ்விலிருந்து நான் வெளியேற நினைத்தது நான் சுயாதீனமாக எடுத்த முடிவு. எனினும் அந்தக் கசப்புனர்வில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளேன். ஆனால் ஒரு சில ஊடகங்கள் எனது பழைய காணொளி வீடியோக்களைத் தங்களது ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது அதிர்ச்சிகரமானதாக உள்ளது. அந்தக் காணொளி எனது பழைய நினைவுகளைக் கிளறுவதாக அமைந்துள்ளது. மீடியா இவ்வளவு கீழ்த்தரமாகச் செயல்படுமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தீபா குறிப்பிட்ட பிறகு அந்த காணொளி நீக்கப்படாததை அடுத்து அவர் பங்கேற்றிருக்கும் 5 வீடியோக்களை அந்த டாக்ஸ் ஆஃப் சினிமா தளத்திலிருந்து ரீஷேர் செய்துள்ளார் தீபா. மேலும் அதுகுறித்துப் புகார் அளிக்கும்படியும் தனது இன்ஸ்டா ஃபாலோயர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது ஃபாலோயர்கள் அந்த வீடியோக்கள் மீது இன்ஸ்டாகிராமில் புகார் அளித்து வருகின்றனர்.