Raveena Daha: பிக்பாஸில் என்ட்ரி தந்த ‘ராட்சசன்’ பட நடிகை ரவீனா தாஹா.. லவ் ட்ராக் இவர சுத்தி இருக்குமோ!
Bigg Boss 7 Tamil: மலையாள குடும்பத்தை பூர்வீகமாக கொண்ட ரவீனா, தனது 4 வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.
Bigg Boss 7 Tamil: விஜய் டிவியில் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் மீண்டும் சின்னத்திரைக்கு தொடங்கி இந்த சீசனை சூப்பராக ஹோஸ்ட் செய்து வருகிறார்.
இரு வீடுகள், 18 போட்டியாளர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7-ல் நடிகர் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சவரண விக்ரம், விசித்ரா, பாவா செல்லதுரை, பாடகர் யுகேந்திரன், விணுஷா தேவி, பிரதீப் ஆண்டனி ஆகியோர் பங்கேற்பதாக ஏற்கெனவே தகவல்கள் கசிந்தன. அதன்படி ஒவ்வொருவராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாவது போட்டியாளராக சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா அறிமுகமாகியுள்ளார். மலையாள குடும்பத்தை பூர்வீகமாக கொண்ட ரவீனா, தனது 4 வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.
தொடர்ந்து சீரியல்களில் நடித்த ரவீனாவுக்கு அதிக ரசிகர்களை கொடுத்தது பூவே பூச்சூடவா மற்றும் மௌன ராகம் 2 சீரியல்கள் தான். இந்த இரு சீரியல்களும் ரவீனாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பை பெற்று தந்தன.
இதற்கிடையே ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் ரவீனா நடித்து இருப்பார். இணையத்தில் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ரவீனா, அண்மையில் கைதாகி இருக்கும் டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் அமர்ந்து இருக்கும் வீடியோக்கள் ஏற்கெனவே இணையத்தில் டிரெண்டாகி இருந்தது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் எண்ட்ரி ஆகி தன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டின் எண்ட்ரி சீனில் பாடலுக்கு நடனமாடும் ரவீனாவின் வீடியோவும் இன்று காலை முன்னதாக இணையத்தில் வெளியாகி வருகிறது.
மாலை 6 மணிக்குத் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, இரவு 11 மணி வரை நேரலையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24x7 நேரலையும் ஒளிபரப்பாக உள்ளது. நாளை (அக்.02) இரவு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் ரசிகர்களே தயாரா... இன்னும் சில மணி நேரங்களில் பிக் பாஸ் 7.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!