Bigg boss 6 tamil:பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றதும் ராபர்ட் மாஸ்டர் செய்த சிறப்பான சம்பவம் - வைரலாகும் போட்டோ..!
கடந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார். பிறகு ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவை நாமினேட் செய்ய பார்ப்பதற்கு கலகலப்பாக இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் ராபர்ட் மாஸ்டர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.
மொத்தம் 21 போட்டியாளர்களில் பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். அஸிம்,விக்ரமன், அமுதவாணன், ராம், கதிர், மணிகண்டா ராஜேஷ், ஏ.டி.கே, ரச்சிதா,மைனா,குயின்ஸி, தனலட்சுமி, ஆயிஷா, ஷிவின் என 13 போட்டியாளர்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
It looks i have studied #Rachitha well. As i have tweeted yesterday, she is the ONLY ONE who never gave a parting hug to #Robert master. Not sure if anyone else predicted this 🤣#BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss6Tamil https://t.co/p3VZW1o0Ph
— Athiban (@athiban43481241) November 27, 2022
இதனிடையே பிக்பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். நாள் ஒன்றில் இருந்தே, அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக பழகி வந்தார். டார்லிங் என்று அனைவரையும் அழைத்து அனைவருடனும் நட்பு பாராட்டினார். மேலும் வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே சக போட்டியாளரான ரச்சிதாவுடன் நெருங்கி பழக தொடங்கினார். ரச்சிதாவிடம் தானாக சென்று பேசுவது, அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பது என சுற்றித்திரிந்த இவர், இதற்காக பல விமர்சனங்களையும் ஏற்றார். இதன் விளைவாக விளையாட்டில் இருந்து அவரது கவனம் திசை திரும்பியது.
Robert Master Eliminated#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/Wh7OqK7GzD
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 25, 2022
கடந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ய, பிறகு ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவை நாமினேட் செய்ய என பார்ப்பதற்கு கலகலப்பாக இருந்தது. ராபர்ட் மாஸ்டர் ஆட்டத்தின் மீது கவனம் இல்லாமல் இருக்கிறார் என்று கூறியே ராபர்ட் மாஸ்டரை அவர் நாமினேட் செய்தார். இதில் மாஸ்டர் குறைவான ஓட்டுகள் பெற, அவர் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ASAI KOLARU (ஆசை கோளாறு) வெளியேற்றப்பட்டார் #Janani #Rachita #dhanalakshmi #Queency #Nivaashiyni #Sherina #BiggBoss #GPMuthuArmy #Gpmuthu #Vikramanan #Asal #Azeem #AsalKolaaru #BiggBossTamilseason6 #BiggBossTamil #BiggBossTamil6 #biggboss6tamil pic.twitter.com/BQQY2GWKDY
— அத்திவெட்டி ஜோதிபாரதி (@jothibharathi) October 30, 2022
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான அசல் கோலாரை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராபர்ட் மாஸ்டரின் ரசிகர்கள் பலர் ஐ மிஸ் யூ டார்லிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.