Bigg Boss 5 Tamil: பிக்பாஸ் போட்டியில் குக் வித் கோமாளி ஸ்டாரா? இவங்களும் இங்கேதானா?
குக் வித் கோமாளி புகழ் கனி பிக்பாஸ் தொடரின் சீசன் 5-ல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இந்த தொடரின் 5வது சீசன் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 5 சீசனுக்கான ப்ரோமா கடந்த வாரம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் பற்றி இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற கனி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான இறுதிப்போட்டியாளர்கள் பெயர்களில் அவரது இடம் பெயரும் இடம்பிடித்துள்ளது. நடிகை கனி திரைப்பட நடிகை விஜயலட்சுமியின் சகோதரி ஆவார். இவர்களது தந்தை பிரபல திரைப்பட இயக்குனர் அகத்தியன் ஆவார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அர்ஜூன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, சுனிதா கோகோய், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது மற்றொரு குக் வித் கோமாளி புகழ் கனியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளிலும் மிகவும் பிரபலமான 30 நபர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் இருந்து இறுதிகட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 சீசன்களிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், பல்வேறு புதிய விதிகள் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக பல்வேறு புதிய அம்சங்களுடன் பிக்பாஸ் வீடு அரங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார்? யார் ? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதமே நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதை மறைமுகமாக உறுதிசெய்தார். இந்த நிலையில், குக் வித் கோமாளி புகழ் கனியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.