பிக் பாஸ் ஃபினாலேவுக்கு பிறகு கமல்ஹாசனை சந்தித்த விக்ரமன்! வைரலாகும் புகைப்படம்
நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட 18 நாள்கள் கழித்து நடிகர் கமல்ஹாசனை விக்ரமன் நேரில் சந்தித்து தன் இணைய பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து சில வார காலத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனும் விக்ரமனும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மக்கள் மனங்களை வென்றவர்
பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஜன.22ஆம் தேதி நடைபெற்றது.
சின்னத்திரை, நிகழ்ச்சி தொகுப்பாளர், பத்திரிகையாளர், அரசியல் எனப் பயணித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த விக்ரமன் இரண்டாம் இறுதியில் ரன்னர் அப்பாகத் தேர்வானார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸீம் என்னதான் பிக் பாஸ் டைட்டிலை வென்றாலும் மக்கள் மனங்களை வென்று விக்ரமன் பேசுபொருளானார்.
விக்ரமன் டைட்டில் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸீம் டைட்டில் வென்றதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் அவரது எண்ணற்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதிருப்தியில் ரசிகர்கள்
மேலும், தன் கனிவான பண்பு மற்றும் தெளிவான பேச்சால் நிகழ்ச்சி தொடக்கம் முதலே கவனம் ஈர்த்து வந்து விக்ரமனின் குணத்தை நடிகர் கமல்ஹாசனும் ரசித்து அவருடன் உரையாடி வந்த நிலையில், வாரம்தோறும் கமல் அறிவுரை சொல்லும் அளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி வந்த அஸீம் டைட்டில் வென்றது இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் பிக்பாஸ் வரலாற்றில் மோசமான முன்னுதாரணம், பாய்காட் விஜய் டிவி, கமல் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
கமல்ஹாசனுடன் சந்திப்பு
இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட 18 நாள்கள் கழித்து நடிகர் கமல்ஹாசனை விக்ரமன் நேரில் சந்தித்து தன் இணைய பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.
அதில் மரியாதை நிமித்தமாக தான் கமல்ஹாசனை சந்தித்ததாகவும் விக்ரமன் குறிப்பிட்டுள்ளார்.விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்வுகளில் விக்ரமன் கலந்துகொண்ட நிலையில், அந்நிகழ்ச்சியை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
இன்று மதிப்பிற்குரிய அண்ணன் திரு @ikamalhaasan அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன். pic.twitter.com/3XUFdF0Gic
— Vikraman R (@RVikraman) February 7, 2023
மற்றொருபுறம் விக்ரமன் தான் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடையே பாலமாக செயல்படுவார் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Prakash Raj Video : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" : தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ்ராஜ்