Bhavatharini Death LIVE: நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரிணியின் உடல்; சோகத்தின் உச்சத்தில் ராஜா குடும்பம்
Bhavatharini Death LIVE Updates: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
LIVE
Background
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார்.
47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வாரிசாக பிறந்த பவதாரணி, தனது ஏகாந்தமான குரலால் தன் சிறு வயது முதலே தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
ரமணர் பாடல்கள் பாடி மெய்மறக்கச் செய்வது, மயில் போல பாடலுக்கு தேசிய விருது என சாதனைகளுடன் தன் இசைப் பயணத்தை சிறு வயதில் தொடங்கிய பவதாரணி, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது.
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பவதாரணி, தன் சகோதரர் யுவன், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். பவதாரணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், சென்ற மாதம் தான் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டதாகவும், இலங்கைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் , சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பவதாரணியின் உறவினரும் நடிகையுமான கருணா விலாசினி தெரிவித்துள்ளார்.
இவரது இசையில் இலக்கணம், அமிர்தம், இந்தி திரைப்படமான பிர் மிலேங்கே உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பவதாரணியின் இழப்பால் வாடும் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Bhavatharini Death LIVE: நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரிணியின் உடல்; சோகத்தின் உச்சத்தில் ராஜா குடும்பம்
மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Bhavatharini Death LIVE: நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பவதாரிணியின் உடல் - சவத்தை தூக்கிய அமீர்
பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. பவதாரிணியின் உடலை இயக்குநர் அமீரும் தூக்கிச் சென்றார்.
Bhavatharini Death LIVE: இறுதிச் சடங்கில் ஓபிஎஸ் மகன்
பவதாரிணியின் இறுதிச் சடங்கில் ரவீந்திரநாத் கலந்து கொண்டனார்.
Bhavatharini Death LIVE: பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பவதாரிணி உடல்
நல்லடக்கம் செய்வதற்காக பவதாரிணியின் உடல் இளையராஜாவின் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Bhavatharini Death LIVE: இறுதிச் சடங்கில் அமீர்
பவதாரிணியின் இறுதிச் சடங்கில் இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டுள்ளார்.