Bhavani Shankar lists: பிடித்த நடிகர், நடிகை, இயக்குநர், வில்லன் - ஆல் டைம் ஃபேவரட் பற்றி சொல்லும் பவானி சங்கர்..
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் யானை திரைப்படத்தின் கதாநாயகி பவானி சங்கர், தனக்கு என்ன பிடிக்கும் என்பதை லிஸ்ட் போட்டுள்ளார்.
பிரியா பவானி சங்கரின் பயணம்:
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், அவரது திறமையால் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பின்னர் மேயாத மான் திரைப்படம் மூலம் பெரிய திரையில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் யானை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்:
நடிகை பவானி சங்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சில சமயங்களில் அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு, சமூக வலைதளங்களில் பதிலளித்தும் வருகிறார்.
பவானி சங்கருக்கு பிடித்த பட்டியல்:
தற்போது என்ன பிடிக்கும் என்பதை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். அதில் பிடித்த நடிகை பார்வதி, பிடித்த நடிகர் மாதவன்,பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு,பிடித்த வில்லன் அருண் விஜய், ஆல் டைம் ஃபேவரைட் மூவி முகவரி, பிடித்த உணவு பிரியாணி, பிடித்த இயக்குநர் வெற்றிமாறன், பிடித்த நிறம், கருப்பு, பிடித்த வசனம்- ஆறுச்சாமி, பிடித்த இடம் என் வீடு என்றும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்