"எல்லாத்தையும் கொளுத்திடுவேன்னு மிரட்டினேன்” - வேதம் புதிது பட பிரச்சனையை பகிர்ந்த பாரதிராஜா!
"சில நேரம் அழகான பெண்கள் இருந்தால் கதைக்கு ஏற்ற மாதிரியாக அவர்களை மோல்ட் செய்துகொள்வேன்"
தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான ஃபார்மெட்டை மாற்றி, சினிமாவை புதிய பாதைக்கு எடுத்துச்சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு ஆதரவாக புரட்சி பேசின. அப்படியான ஜானரில் வெளியான திரைப்படம்தான் வேதம் புதிது. இந்த படத்தில் சத்தியராஜ் மற்றும் அமலா நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது ஆனாலும் படம் வெளியாவதற்கு முன்னதாக ஏகப்பட்ட சவால்களை சந்தித்தது. இது குறித்து பாரதிராஜா நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில்”வேதம் புதிது நான் மிகவும் நேசித்து எடுத்த படம். மிகுந்த சிக்கலுக்கு ஆளாகித்தான் அந்த படம் வெளியே வந்தது.படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பிய பொழுது படத்தை சென்சார் செய்ய மறுத்துவிட்டார்கள் . கேட்டால் மேலிடத்து உத்தரவு என்றார்கள். நான் இந்த படத்தில் என்ன தவறு என கேட்டேன். பெரிய பிரச்சனை வந்தது. அப்போ எம்.ஜி.ஆர் மிகப்பெரிய உதவி செய்தார். அதன் பிறகும் பிரச்சனை வந்தது. அதன் பிறகு நேராக சாஸ்திரி பவனுக்கு சென்று கேட்டேன். அங்கிருக்கும் சென்சார் போர்ட் அதிகாரிகள் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு அனுமதி வாங்கி வர சொன்னார்கள். அப்போது நான் இப்படியே செய்தால் பெட்டியை தீ வைத்து கொளுத்திடுவேன்னு சொன்னேன். இரண்டு நாட்கள்ல சான்றிதழ் வரவில்லை என்றால் நான் இப்படித்தான் செய்வேன். அதன் பிறகு தமிழ்நாடு முழுதும் நடக்கும் பிரச்சனைகளை சந்திக்க தயராக இருந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு மிரண்டு போய் சான்றிதழ் கொடுத்தாங்க. வேதம் புதிது படம் எம்.ஜி.ஆர் பார்த்த கடைசி படம் . கதைக்கான முகம் தேடி அலைவேன்.சில நேரம் அழகான பெண்கள் இருந்தால் கதைக்கு ஏற்ற மாதிரியாக அவர்களை மோல்ட் செய்துகொள்வேன் “ என தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா