மேலும் அறிய

பாரதி கண்ணம்மா: வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? ஃபரீனாவுக்கு 'மிஸ் யூ' சொன்ன புஷ்பா!

புஷ்பா இன்ஸ்டாகிராமில் மிஸ் யூ என்று கூறியிருப்பதால் ஃபரீனா விலகியுள்ளாரா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

சின்னத்திரையில் ட்ரெண்டிங்கில் இருந்து தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா உள்ளது. டி.ஆர்.பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருப்பவர் ’வெண்பா’ தான். இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீது இரக்கப்படுபவர்கள் அனைவரும் வெண்பாவை கடுமையாக திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பதை அனைவரது வீடுகளிலும் காண முடியும். வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டுவிட்ட பிறகு இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஃபரீனா.

பாரதி கண்ணம்மா: வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? ஃபரீனாவுக்கு 'மிஸ் யூ' சொன்ன புஷ்பா!

இதனிடையே ஃபரினா கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்து சில வாரங்களாகவே அவரது கர்ப்பத்தை போட்டோக்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். மேலும் கர்ப்பமாக இருப்பதால் வயிறு வெளியே தெரிய தொடங்கியிருப்பதால் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என இயக்குநரிடம் நானாக சென்று கூறியதற்கு, இயக்குனர் காரணத்தை ஏற்க மறுத்திருக்கிறார், நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள் என கேஷ்வலாக சொல்லியிருந்தார். அதனால், இப்போதைக்கு சீரியலில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை வெண்பாவாக அவரே நடித்து வந்தார். இந்தநிலையில், அவரது பிரசவத்தைக் கருத்தில் கொண்டு, வெண்பா சிறைக்கு செல்வது போல் கதை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சீரியலில் இருந்து ஃபரீனா விலகியுள்ளதாக, வேலைக்காரி கேரக்டரில் நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, மிஸ் யூ ஃபரீனா என குறிப்பிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா: வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? ஃபரீனாவுக்கு 'மிஸ் யூ' சொன்ன புஷ்பா!

ஆனால் உண்மையில ஃபரீனா சீரியலில் இருந்து விலகி விட்டாரா என தெரியவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் ரசிகர் ஒருவர் பூஷபாவிடம் இன்ஸடாகிராமில் ஒரு கேள்வி கேட்டிருந்தார். வெண்பா கதாபாத்திரம் ஆள் மாற்ற படுவார்களா என்ற அந்த கேள்விக்கு, 'நோ' என்று பதிலளித்திருக்கிறார். அதனை வைத்து ரசிகர்கள் ஆசுவாசம் அடைந்தாலும், அந்த 'நோ'விற்கு சொல்லமாட்டேன் என்பது கூட பதிலாக இருக்கலாம் என்று ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர். சீரியலின் இத்தனை பிரபலத்திற்கு காரணம் அந்த கதாபாத்திரம் தான் என்று இயக்குனர் மற்றும் இயக்க குழுவிற்கு தீர்க்கமாக தெரிந்திருக்கிறது. சீரியலை காண்பவர்கள் ஒட்டுமொத்த வன்மத்தையும் வெண்பா கதாபாத்திரத்தின் மீதான முகத்தில் தான் ஆற்றிக்கொள்கிறார்கள். அந்த முகத்தை மாற்றினால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று தெரிந்ததால் படக்குழு குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் வெகு விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget