கண்ணம்மாவிற்கு பாரதி விதிக்கப்போகும் நிபந்தனை என்ன தெரியுமா? லப்டப்பை எகிறவைத்த வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவிற்கு பாரதி விதிக்கப்போகும் நிபந்தனை என்ன என்று? எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ப்ரோமோ ஏமாற்றத்தை தந்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் பாரதி கண்ணம்மாவிற்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில், தேவையில்லாத காட்சிகளால் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால், பாரதி கண்ணம்மாவின் டிஆர்.பி. ரேட்டிங்கும் சரிந்துள்ளது.
ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிவு தெரிந்துவிடும் என்ற சிம்பிள்ளான ஐடியாவை விட்டுவிட்டு கோவிலுக்கு பொங்கல் வைத்து தெரிந்துகொள்ள முயற்சிப்பது, அங்கு கண்ணம்மாவின் பொங்கல் பானை முதலில் பொங்கியும் பாரதிக்கு நம்பிக்கை வராமல் இருப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை சோதித்தது.
இந்த நிலையில், ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும், மீண்டும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த ப்ரோமாவை வெளியிட்டுள்ளது. முதலில் வெளியான ப்ரோமாவில் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ஒரு கண்டிஷன் என்று பாரதி கூறுவது போல ப்ரோமோ இருந்தது. ஆனால், அந்த ப்ரோமாவில் இன்னும் 5 நாட்களில் என்று இருந்தது. இதனால், ரசிகர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்று மீண்டும் எதிர்பார்த்தனர்.
ஆனால், பாரதி கண்ணம்மா தொடருக்காக இன்று வெளியான அடுத்த ப்ரோமோ ரசிகர்களை மீண்டும் வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது, ஏற்கனவே வெளியான ப்ரோமாவை வெளியிட்டு இன்னும் இரண்டு நாட்களில் என்று கூறுவது போல உள்ளது. இதனால், நொந்து போன ரசிகர்கள் அப்போ அடுத்த ப்ரோமோவில் இன்னும் ஒருநாள் என்று வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே சமயத்தில் கண்ணம்மாவிற்கு பாரதி விதிக்கப்போகும் கண்டிஷன் என்ன? மீண்டும் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்களா? பாரதியின் கண்டிஷனை கண்ணம்மா ஏற்றுக்கொள்வாரா? ஏற்க மறுத்தால் என்ன ஆகும்? என்றும் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்