மேலும் அறிய

Bhagyalakshmi Serial: “தாத்தா” ஆன புது மாப்பிள்ளை கோபி...அதிர்ச்சியில் ராதிகா...மகிழ்ச்சியில் பாக்யா குடும்பத்தினர்!

Bhagyalakshmi Serial Written Update Today (08.11.2022): பல கஷ்டங்களுக்குப் பின் குடும்பத்துக்கு உன்னோட பிள்ளை மூலமாக நல்ல செய்தி வந்ததாக ஜெனியிடம் ஈஸ்வரி தெரிவிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நீண்ட நாட்களுக்குப் பின் பாக்யா குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

ஜெனிக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி 

தனது அறையில் செழியன் தூங்கி கொண்டிருக்க ஜெனி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு எழுகிறார். என்ன சாப்பிட்ட, எதுவும் உடம்பு சரியில்லையா என அவர் கேட்க, ஜெனியும் தெரியலை என சொல்லிவிட்டு பின் ஈஸ்வரியிடமும், பாக்யாவிடமும் தனது 2,3 நாட்களாக இந்த பிரச்சனை இருப்பதாக கூறுகிறார். உடனே எல்லாம் நல்லா செய்தியாக தான் இருக்கும் என எண்ணி டாக்டரிடம் கூப்பிட்டு போக சொல்கிறார் ஈஸ்வரி. 

தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி, ஈஸ்வரி, எழில், செல்வி ஆகியோர் ஜெனி, பாக்யா, செழியன் ஆகியோர் டாக்டரிடம் போன விஷயம் என்ன ஆனதோ என பதட்டத்துடன்  காத்திருக்க பாக்யா வந்து ஜெனி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தி சொல்கிறார். மொத்த வீடும் ஹேப்பியாக மாறுகிறது. பல கஷ்டங்களுக்குப் பின் குடும்பத்துக்கு உன்னோட பிள்ளை மூலமாக நல்ல செய்தி வந்ததாக ஜெனியிடம் ஈஸ்வரி தெரிவிக்கிறார். உடனே பாக்யா கேசரி செய்யப் போக பாசுந்தி வாங்கி கொடுங்க என செல்வி கேட்க, செழியன் வாங்க செல்கிறார். 

”தாத்தா” கோபி 

கோபியை வெறுப்பேற்ற நினைக்கும் ராமமூர்த்தி ஸ்வீட் பாக்ஸோடு நேராக அவர் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ராதிகா கோபியிடம் மாவு அரைக்கிறது எல்லாம் கஷ்டம்.போய் கடையில மாவு வாங்கிட்டு வாங்க என  பேசிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே வந்து நான் கொள்ளுத்தாத்தாவாக போறேன். என் பேத்தி ஜெனி அம்மாவாக போறான். செழியன் அப்பாவாக போறான் என சொல்லிவிட்டு நீ தாத்தாவாக போற கிண்டல் செய்கிறார். இதைக் கேட்டு ராதிகா டென்ஷனாகிறார். என்னதான் நீ புதுமாப்பிள்ளைன்னு சொன்னாலும் நாளைக்கு நீ வெளியே போறப்ப எல்லாரும் கோபி நீங்க தாத்தாவாக போறீங்களாமே என கேட்பார்கள் என கொளுத்திப் போட கோபி என்னடா இது சோதனை என முழிக்கிறார். 

செழியனை சந்திக்கும் கோபி 

அடுத்ததாக தயாரிப்பாளர் அலுவலகத்தில் அம்ரிதாவிடம் வர்ஷினி எழிலுடனான காதல் கதையை கடுப்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்க கல்யாணம் பண்ணுவீங்களா என உள்நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்வியைக் கண்டு அம்ரிதா குழப்பமடைகிறார். அப்போது அங்கு வரும் எழில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு விஷயத்தை சொல்ல அம்ரிதா ஜெனியிடம் இப்பவே பேசுகிறேன் என சொல்லி போனில் அவரை அழைக்கிறார். 

தொடர்ந்து செழியனை சந்திக்கும் கோபி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஜெனிக்கு இந்த நேரத்தில் தேவையானதை செய்ய வேண்டும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களோடு இருக்க நினைக்கிறேன் என தனது பரிதவிப்பையும் சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget