Bhagyalakshmi Serial Update: கோபியின் காதலுக்கு முட்டுக்கட்டையாய் நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்...!
பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு வருகை தந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் கோபி ராதிகாவுடன் போன் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு தற்போது டபுள் கொண்டாட்டமாக உள்ளது. இந்த இரு குடும்பங்களின் சங்கம நிகழ்ச்சிதான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருந்தாலும், கதையின் நாயகன் கோபிக்கு ஏனோ பெரும் திண்டாட்டமாகதான் உள்ளது.
ராதிகா மாறி, மாறி போன் செய்து கொண்டிருக்க வீடு முழுவதும் ஆட்கள் இருந்ததால் கோபியால் போன் பேச இயலவில்லை. இதனால், படிக்கட்டிற்கு சென்று போன் பேசலாம் என்று சென்ற கோபிக்கு அங்கு எழிலும், கதிர், ஜீவா படுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பது இன்னும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள் மீது பேசிக்கொண்டே சென்று கோபி மோதி விடுகிறார்.
இவர்களை கண்டு அதிர்ச்சியான கோபி போனை கட் செய்து விடுகிறார். பின்னர், மீண்டும் கோபியை உட்கார வைத்து ஜீவா பேசுகிறார். அப்போது, திடீரென போன் கட் ஆனதால் ராதிகா மறுபடியும் கோபிக்கு போன் செய்கிறார். இவர்கள் மூன்று பேரையும் சமாளித்துவிட்டு ராதிகாவிடம் போன் பேசலாம் என்று வந்த கோபிக்கு வீட்டில் பாக்கியம், தனம், செல்வி மற்றும் முல்லை பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் இந்த கும்பலை எத்தனை நாள்தான் சமாளிக்கப் போகிறோமோ என்ற எரிச்சல் இன்னும் அதிகமாகிறது.
தனம், செல்வி மற்றும் முல்லையுடன் பாக்கியா பேசிக் கொண்டிருந்தபோது மீனா போர்வையை போர்த்திக் கொண்டே இனியா மற்றும் ஐசுவையும் குறை கூறிக்கொண்டே வருகிறார். இதனால், மீனாவை பாக்கியா தன் அருகேயே படுக்க வைத்துக் கொள்கிறார். மறுபுறம் ஜீவாவும், ஐஸ்வர்யாவும் பாக்கியலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தனது கணவர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுவதை பார்த்து ஈஸ்வரி மிகவும் சந்தோஷப்படுகிறார். இப்படி குடும்பமே ஒவ்வொரு திசையில் மகிழ்ச்சியாக இருக்க கோபி மட்டும் ராதிகாவின் போனுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று வேதனையில் அங்குமிங்கும் திரிகிறார். கோபியின் கலக்கத்துடனே இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.
மேலும் படிக்க : Beast: ஹலமித்தி ஹபிபோ வந்தாச்சு.. இனி வீட்டிலேயே அரபிக்குத்து.. ஓடிடியில் வெளியானது பீஸ்ட்.!
மேலும் படிக்க : Sasikumar: மீண்டும் இயக்குநர்? முக்கிய நாவலை கையிலெடுக்கும் சசிகுமார்.. நடிகராக விஜயகாந்த் மகன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்