மேலும் அறிய

Sarathkumar - Devayani Combo : 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சரத்குமார் - தேவயானி! ரசிகர்கள் வெயிட்டிங் !

Sarathkumar - Devayani Combo : தமிழ் சினிமாவின் சூப்பர் கியூட் ஆன் ஸ்கிரீன் பேர்களில் ஒருவரான சரத்குமார் - தேவயானி ஜோடி 22 ஆண்டுகளுக்கு பிறகு சித்தார்த் 40 படத்தின் மூலம் இணைய உள்ளனர்.  

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை தேவயானி. காதல் கோட்டை படத்தின் வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்ற தேவயானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விஜய், கமல், முரளி, மம்மூட்டி, பிரஷாந்த், ராமராஜன், ஜெயராம், நெப்போலியன், பார்த்திபன், கார்த்திக், பிரபு என அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தேவயானிக்கு சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடியாக இருந்தவர் நடிகர் சரத்குமார்.  

Sarathkumar - Devayani Combo : 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சரத்குமார் - தேவயானி! ரசிகர்கள் வெயிட்டிங் !

தேவயானி - சரத்குமார்  :

தேவயானி - சரத்குமார் ஜோடியாக சேர்ந்து சமஸ்தானம், தென்காசிபட்டணம், பாட்டாளி, ஒருவன், மூவேந்தர், சூர்யவம்சம் என பல படங்களில் நடித்துள்ளனர். அதிலும் விக்ரமன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான சூர்யவம்சம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் டாப் நடிகை அந்தஸ்தை பெற்று கொடுத்தது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரத்குமார் - தேவயானி ஜோடி இணையுள்ளது. 

சித்தார்த் 40 :

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநராக பிரபலமான ஸ்ரீ கணேஷ் தற்போது நடிகர் சித்தார்த்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் இது சித்தார்த் நடிக்கும் 40வது திரைப்படமாகும். இதில் மீதா ரகுநாத் , மற்றும் கன்னட நடிகை சைத்ரா அசார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் மூலம் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

Sarathkumar - Devayani Combo : 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சரத்குமார் - தேவயானி! ரசிகர்கள் வெயிட்டிங் !

சின்னத்திரையில் தேவயானி:

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை தேவயானி. சன் டிவியில் ஒளிபரப்பான  'கோலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற தேவயானி அதை தொடர்ந்து முத்தாரம், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருந்துள்ளார். 

மீண்டும் இணையும் கம்போ : 

சித்தார்த் 40 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தேவயானிக்கு  நல்ல ஒரு கம் பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் டூப்பர் ஜோடிகளான சரத்குமார் - தேவயானி காம்போவை 22 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் பார்க்க போவதை எண்ணி அவர்களின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.  

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

Embed widget