கதறி அழும் கைகுழந்தை..உச்சகட்ட போதையில் அம்மா..எல்லை மீறிய புத்தாண்டு கொண்டாட்டம்
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் மிதமிஞ்சிய போதையில் தெருக்களில் உலாவந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளன. மதுபோதையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பாகுபாடில்லாமல் தெருக்களில் விழுந்து கிடப்பதும், காவல்துறையுடன் ரகளை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பெண் ஒருவர் கைக் குழந்தையை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கூட்டி வந்து மதுபோதையில் விழுந்து கிடந்த வீடியோ பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போது மக்கள் புதிய நம்பிக்கைகளோடு அந்த ஆண்டை வரவேற்கிறார்கள். குறிப்பாக நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இளைஞர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை , பெங்களூர் , டெல்லி , மும்பை , புனே போன்ற நகரங்கள் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு பெயர்போனவை. பெங்களூர் போன்ற பப் கலாச்சாரம் அதிகமுள்ள நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லை மீறி போவதும் உண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த காட்சிகளை நாம் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். அந்தவகையில் இந்த ஆண்டும் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம் பெரும் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.
தெருக்களில் விழுந்து கிடந்த இளைஞர்கள்
இந்தியாவில் அதிகளவில் ஐடி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களில் ஒன்று பெங்களூர். பல்வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து மக்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் புத்தாண்டை மக்கள் கூட்டமாக திரண்டு பெரியளவில் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கோரமங்கலா , எம்.ஜி ரோட் , ப்ரிகேட் ரோட் ஆகிய முக்கிய இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை வரவேற்றனர். மதுபோதையில் மக்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளிடம் ரகளை செய்தும், தெருக்களில் சுய நினைவின்றி விழுந்துகிடந்துள்ளார்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
கைக்குழந்தையை தவிக்கவிட்ட தாய்
மேலும் சிலர் தங்கள் கைகுழந்தைகளையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்கள். அப்படி தனது குழந்தையை கூட்டி வந்த பெண் ஒருவர் அதீத மதுபோதையில் தெருவில் விழுந்துகிடந்தார். என்ன செய்வதென்று தெரியாத அவரது குழந்தை அங்கு அழுதபடியே நின்றது. சுற்றி இருந்தவர்கள் அந்த பெண்ணை சுய நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தும் பயனில்லை. பின் காவல்துறையினரின் உதவியோடு அந்த பெண்ணை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் பெரியளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Young Mom is so drunk that she fell down while kid is crying😢 What is this New Year celebration? pic.twitter.com/txU4YezFVn
— Rosy (@rose_k01) January 1, 2026





















